Saturday, April 2, 2022

அன்னை போல்-வந்து(என்னை யாரென்று எண்ணி எண்ணி) **

அன்னை போல்-வந்து  அள்ளி-அள்ளி யார் ஊட்டுவார்
அழும்குரல்-கேட்கும் முன்னர்-வந்து தாலாட்ட  யார்
(2)
நாம் மண் பூசி அலைந்தாலும் சேயல்லவா 
என்றாசை முத்தாடும் தாயல்லவா 
அன்னை போல்-வந்து  அள்ளி-அள்ளி யார் ஊட்டுவார்
அழும்குரல்-கேட்கும் முன்னர்-வந்து தாலாட்ட  யார்
(Music)

என்றும் நமக்காக உயிர் வாழும் அவள் பாசமாய் 
நமக்காக செய்யும் த்யாகம் எழும் நேசமாய்
(2)
தனக்காக அவள் கொள்வாள் பேராசையாய் (2)
அது பிள்ளை மேல் காட்டும் உயர் பாசமாம் 
(Very Short Music)
அன்னை போல்-வந்து  அள்ளி-அள்ளி யார் ஊட்டுவார்
அழும்குரல்-கேட்கும் முன்னர்-வந்து தாலாட்ட  யார்
(Music)

அன்னை மடி-என்ற இடம்-நாடி அடைந்தால் அம்மா 
எனும்-வார்த்தை தனைச்-சொல்லி அழுதால் அம்மா 
(2)
இதம் என்னும் தேன்-பூசி அணைப்பாள் அம்மா (2)
ஊற்றாகும் அவள் அன்பின் பேர் என்னம்மா ?
(VSM)
அன்னை போல்-வந்து  அள்ளி-அள்ளி யார் ஊட்டுவார்
அழும்குரல்-கேட்கும் முன்னர்-வந்து தாலாட்ட  யார்
(Music)

என்றும் கண்-காணும் ஒரு-தெய்வம் தாயில்லையா அவள் 
தரும்-பாசம் போலொன்று ஏதோ-அய்யா 
(2)
அவள்-பாதம் நாம்-தங்க இடமல்லவா (2)
அதன்-மேலும் ஒரு-வீடு வேறெதய்யா 
(VSM)
அன்னை போல்-வந்து  அள்ளி-அள்ளி யார் ஊட்டுவார்
அழும்குரல்-கேட்கும் முன்னர்-வந்து தாலாட்ட  யார்
நாம் மண் பூசி அலைந்தாலும் சேயல்லவா 
என்றாசை முத்தாடும் தாயல்லவா 
நாம் மண் பூசி அலைந்தாலும் சேயல்லவா 
என்றாசை முத்தாடும் தாயல்லவா 
அன்னை போல்-வந்து  அள்ளி-அள்ளி யார் ஊட்டுவார் .. 

No comments:

Post a Comment