Friday, September 11, 2026

1. நானும் நீயும் யுகம் பலதாண்டி | பாலும் பழமும் | Naanum Neeyum | Paalum Pazhamum

ம்..ம்ம் 
(SM)
நானும் நீயும் யுகம் பலதாண்டி இருந்து பாங்காய் உடல் பல தாங்கி 
பிறந்து உலகில் வாழ்ந்துது போலே  இருக்கு அன்பே எனக்கு உன்னாலே
நானும் நீயும் யுகம் பலதாண்டி இருந்து பாங்காய் உடல் பல தாங்கி 
பிறந்து உலகில் வாழ்ந்துது போலே  இருக்கு அன்பே எனக்கு உன்னாலே
(music)
உண்ணும் உணவில் உணர்வென நீயே உறங்க வரும் என் கனவிலும் நீயே (2)
எந்தன் சொல்லினை மதிப்பவள் நீயே உந்தன் சொல்லிலும் பணிவுகொண்டாயே (2)
நானும் நீயும் யுகம் பலதாண்டி இருந்து பாங்காய் உடல் பல தாங்கி
பிறந்து உலகில் வாழ்ந்துது போலே  இருக்கு அன்பே எனக்கு உன்னாலே
(music)
எஞ்சி இருக்கும் உணவு உண்டாயே எனக்கு என்றும் விருந்து தந்தாயே (2)
பஞ்சில் இருக்கும் மென்மையை நீயே உந்தன் மனமாய்க் கொண்டிருந்தாயே (2)
நானும் நீயும் யுகம் பலதாண்டி இருந்து பாங்காய் உடல் பல தாங்கி 
பிறந்து உலகில் வாழ்ந்துது போலே  இருக்கு அன்பே எனக்கு உன்னாலே
(music)
ஈன்ற தாயை நான் உன்னில் கண்டேன் உனது அன்பே நம் வாழ்வின் எல்லை (2)
எதனைக் கொடுத்தே மனம் நான் நிறைவேன் எனது கடனை அடைத்திட நானே (2)
நானும் நீயும் ஓர்மனமாகி உலக வாழ்வின் கடலினில் நீந்தி  
சோகம் எதிலும் மூழ்கிவிடாமே ஓடமானாய் குலமகள் நீயே 
ம்..ம்ம்

SATHYA SONGS

No comments:

Post a Comment