Friday, September 11, 2026

2. எந்தன் உயிராய் உன்னை நானறிவேன் | முத்துநகையே | Endhan Uyiraai | Muthu Nagaiye

எந்தன் உயிராய் உன்னை நானறிவேன்  ஆஹா .. ஆஹா .. 

உந்தன் உயிராய் என்னை நீயறிவாய் நம்மை யாரறிவார் ..ஓஹோ..  ஓஹோ
(Short Music)
எந்தன் உயிராய் உன்னை நானறிவேன்  ஆஹா .. ஆஹா .. 
உந்தன் உயிராய் என்னை நீயறிவாய் நம்மை யாரறிவார் ..ஓஹோ..  ஓஹோ
(Music)
நகமும் சதையும் போலே நாமும் இன்றுவரை நன்றிருந்திட்டோம்
இன்னும் இருக்கும் காலம் முழுதும் ஒன்றி நாமிருந்து களிப்போம் 
எந்தன் உயிராய் உன்னை நானறிவேன்  ஆஹா .. ஆஹா .. 
(MUSIC)
இன்னுயிரைத் தந்தாய் நீ அவர்க்கு
அவ்விதத்தில் தந்தை சேய் உனக்கு
இன்னுயிரைத் தந்தாய் நீ அவர்க்கு
அவ்விதத்தில் தந்தை சேய் உனக்கு
தன்னை விடப் பெரிதாய் பார் உனக்கு 
அது தான் நிஜமெனும் பேர் உனக்கு 
எந்தன் உயிராய் உன்னை நானறிவேன்  ஆஹா .. ஆஹா .. 
உந்தன் உயிராய் என்னை நீயறிவாய் நம்மை யாரறிவார் ..ஓஹோ..  ஓஹோ
(MUSIC)
எந்தனுயிர்த் தாய் போல் உன் பரிவு 
நெஞ்சறிந்த சேவை உன் புரிவு
எந்தனுயிர்த் தாய் போல் உன் பரிவு 
நெஞ்சறிந்த சேவை உன் புரிவு
வேற்றெவர்க்கும் அன்பாய் ..
(Short Music)
வேற்றவர்க்கும் அன்பாய் புன் சிரிப்பு அடடா அது ஓர் பூவிரிப்பு
வேற்றவர்க்கும் அன்பாய் உன் சிரிப்பு அடடா அது ஓர் பூவிரிப்பு
(Short Music)
எந்தன் உயிராய் உன்னை நானறிவேன்  ஆஹா .. ஆஹா ..
உந்தன் உயிராய் என்னை நீயறிவாய் நம்மை நாமறிவோம்

SATHYA SONGS

No comments:

Post a Comment