Friday, December 11, 2015

சென்னைக்கினி வான் மழை (சோதனை மேல் சோதனை)




சென்னைக்கினி வான்-மழை போதுமடா சாமி


(1+Short Music+1)
என்னைக்குமே துளியுமதை தங்காது பூமி (2)
சென்னைக்கினி வான்-மழை போதுமடா சாமி
(MUSIC)

எங்கும் பல வீடு-மட்டும் ஊரானது
அதில் வெள்ளம்-புக ஊர்-முழுக்க நீரானது
(2)
சென்னைக்கினி வான்-மழை போதுமடா சாமி
(MUSIC)

நீரோட்டம் இல்லையென்றே மக்களும் வேண்ட
நீர் பெரும்-கோரம் புரிந்து-அதன் வேகத்தைக் காட்ட 

(2)
பரிதாபம் கண்டதற்கே இதயங்கள் நிற்க
ஐயோ அனுபவித்த பேர்-கதியை என்னென்று சொல்ல
ஓரு -நாளும் வான் இது-போல் பொழிந்ததுமில்லை
அந்தத் திருநாளை ஏன்-கொடுத்தாய்ச் சென்னையைக் கொல்ல
 

சென்னைக்கினி வான்-மழை போதுமடா சாமி
என்னைக்குமே துளியுமதை தங்காது பூமி
சென்னைக்கினி வான்-மழை போதுமடா சாமி

(MUSIC)
 
“இறைவா ..! காஞ்சுப் போன நிலத்துக்காக எல்லோரும் உன்னிடத்தில் மழை-வரம் கேட்டோம், ஆனா நிலமே கடலாப் போய்ட்டா …! உலகத்து ஜனங்கள்ல சில-பேர் தவறுகள்-பல செஞ்சுக்கிட்டு இருக்காங்க. ஆனா அதுக்காக எல்லாருக்கும் தண்டனை தந்தா அந்த கொடுமைக்கு யாரால ஞாயம் காண முடியும்”

ஊர் வாடச் சென்னைக்குப் பேய் மழை வந்தது
அது என்ன பாடம் தன்னைச்-சொல்ல ஊரழித்தது. 

(1+sm+1)
புரியாமல் நல்-மனங்கள் பல-வாடுது
அதன் உள்-நோக்கம் காண-ஓலப் பண்-பாடுது
அடி-வாங்கித் திருந்த-பிள்ளை போலா ஐயா
இடி-வாங்கி வருந்த-சென்னை தானா ஐயா
சென்னைக்கினி வான்-மழை போதுமடா சாமி
என்னைக்குமே துளியுமதை தங்காது பூமி
சென்னைக்கினி வான்-மழை போதுமடா சாமி


No comments:

Post a Comment