Saturday, December 12, 2015

சொர்க்கத்தில் (சொர்க்கத்தில் கட்டப்பட்ட)


வெள்ளத்தில் ஓலைக் குடிசையும் அடித்துச் செல்லப்பட்ட ஏழையின் ஓலம்
______



சொர்க்கத்தில் ஏன்-உனக்கு வேலை சாமி…வெள்ளத்தில் வாடுதிந்த பூமி
(1+SM+1)
மாளிகை மாடம் கொண்ட மன்னன் இல்லை 

நானொரு ஓலைவீட்டுப்பிள்ளை 
(2)
சொர்க்கத்தில் ஏன்-உனக்கு வேலை சாமி…வெள்ளத்தில் வாடுதிந்த பூமி
(MUSIC)

உள்ளத்தை முட்டும்-துன்ப வெள்ளங்களும் எனக்கு
ஐயயோ ஏற்கனவே பலப்பல இருக்கு
சென்னைக்கு வெள்ளம்-என்று இன்னும்-ஒண்ணு புதுசு
அய்யா தந்து-கெடுத்தாயே என்னே உந்தன் மனசு
சொர்க்கத்தில் ஏன்-உனக்கு வேலை சாமி…! வெள்ளத்தில் வாடுதிந்த பூமி
சாமி…! வெள்ளத்தில் வாடுதிந்த பூமி.. வெள்ளத்தில் வாடுதிந்த பூமி
(MUSIC)

என்னத்தைச் சொல்லி-அழ நான்-கொண்ட-வீடு
ஓலைக்குள்-ஓலைப் பின்னல் தான்-அதன் ஓடு
 

என்னைக்கும் ஏழைக்குத்தான் தந்தாய் பெரும்பாடு 
(1+sm+1)
ஐயா அரண்மனை வீட்டினில்-பார் செல்லாதுந்தன் பீடு
சொர்க்கத்தில் ஏன்-உனக்கு வேலை சாமி…! வெள்ளத்தில் வாடுதிந்த பூமி
(MUSIC)

வெள்ளத்தின் நாசம்-கொண்டு சோகத்தில் துடிக்கும்

 ஏழை-என் கோபம்-தன்னைக் காட்டியே புலம்ப 
 ஞாலத்தில் தெய்வம்-ஒன்று தான்-உண்டு எனக்கும் (2)
உன் பொன்மலர் பாதமன்றி  எது-வந்து  தடுக்கும்
சொர்க்கத்தில் ஏன்-உனக்கு வேலை 

சாமி…! வெள்ளத்தில் வாடுதிந்த பூமி
மாளிகை மாடம் கொண்ட மன்னன் இல்லை நானொரு ஓலைவீட்டுப்பிள்ள
சொர்க்கத்தில் ஏன்-உனக்கு வேலை 
சாமி…! வெள்ளத்தில் வாடுதிந்த பூமி (2)

ஸ்வாமி ஓ ஸ்வாமி எந்தன் ஸ்வாமி



No comments:

Post a Comment