Sunday, August 30, 2015

8. தாயெனும் தெய்வத்தை(தாயெனும் செல்வங்கள்)

 
(தாயெனும் செல்வங்கள்)

தாயெனும் தெய்வத்தைப் போற்றாத-யார்க்கும்
யாகங்கள்-எங்கே பலன்-கொடுக்கும்

(1+Short Music+1)
அன்றாடம் அவர்-செய்யும் பூஜைகளில்
உயர்வான நிலை-எங்கு உருவாகிடும்
எப்போதும் *நோயின் நிலை-தொடரும்

தாயெனும்-தெய்வத்தைப் போற்றாத-யார்க்கும்
யாகங்கள்-எங்கே பலன்-கொடுக்கும்
(MUSIC)

பட்டாடை பொன்-சூடிக் கோலம்-கொண்டு
காண்போரின் மனம்-ஈர்க்கும் வேடம்-கொண்டு

(2)
எப்போதும் ஒளிவீசும் குறிகள்-கொண்டு
 அன்னைக்கு இல்லாமல் பூஜை-அன்று

தாயெனும்-தெய்வத்தைப் போற்றாத-யார்க்கும்
யாகங்கள்-எங்கே பலன்-கொடுக்கும்
(MUSIC)

ஆவென்று நீகூற நிற்பாள்-அங்கே
உன்-பாடு தனைப்-போக்க விரைவாள் அன்னை

உன்-காயம் தனதென்று துடிப்பாள் அன்னை
நீ தான்-
ன் உயிர்-என்று அணைப்பாள் உன்னை 
தாயெனும் தெய்வத்தைப் போற்றாத யார்க்கும்
யாகங்கள் எங்கே பலன் கொடுக்கும்
(MUSIC)

நமக்கென்று ஒருதாயைக் கொடுத்தானடா
தனக்கென்று தாயற்ற அவன்-யாரடா
தாயாக உறவாடும் அவன்-தானடா
என்றைக்கும் நமைக்காக்கும் இறையோனடா

இன்றேனும் அவள்-பாதம் பணிவாயடா
உன்-பாவம் சிறிதேனும் கழிந்தோடட்டும்
* உன்-நோயின் வேகம் குறைந்திடட்டும்

தாயெனும் தெய்வத்தைப் போற்றாத யார்க்கும்
யாகங்கள் எங்கே பலன் கொடுக்கும்



*பிறப்பிறப்பு எனும் நோய்




No comments:

Post a Comment