Tuesday, December 8, 2015

நம் சென்னை செய்த பாவம் (என் அன்னை செய்த பாவம்)

சென்னை வெள்ளம்




நம் சென்னை-செய்த பாவம் வான் மண்ணில்-வந்தது
ஓர் இழவு-வீட்டுக் கோலம்-ஓர் நொடியில்-பூண்டது
(1+SM+1)
நம் சென்னை-செய்த பாவம்..
(SM)

 நம் ஆசை-என்ற பாவம் பல வீட்டைச் செய்தது
அதைக் களைய-நமக்குப் பரிகாரம் வெள்ளம்-என்பது
கடவுள் செய்தது

நம் சென்னை-செய்த பாவம் வான் மண்ணில்-வந்தது
ஓர் இழவு-வீட்டுக் கோலம்-ஓர் நொடியில்-கொண்டது
நம் சென்னை-செய்த பாவம்..
(MUSIC)

அதற்கெனவும் இதற்கெனவும் இடம் பிடித்தோமே
மழை நீருக்கு-ஓர் தடம்-கொடுக்க மறுத்து-விட்டோமே
மழை இல்லையே என்று-தினம் ஏங்கிய நாமே
அது வந்த-உடன் பிடிக்கக்-குடம் உடைத்து-நின்றோமே
பைத்தியம் நாமே
நம் சென்னை-செய்த பாவம்….
(MUSIC)

வீட்டிலெங்கும் சமுத்திரம்-போல் நீரைக்-கொண்டோமே
அதில் ஒரு-துளியும் பயனில்லையே பருகிட-நாமே
பெரிய-க்ரௌண்டில் வீடு-மட்டும் நிலமும்-இல்லையே
மழை வந்த-போது வீட்டுக்குள்-ஓர் நலமும் இல்லையே
நம் சென்னை-செய்த பாவம் வான் மண்ணில்-வந்தது
ஓர் இழவு-வீட்டுக் கோலம்-ஓர் நொடியில்-பூண்டது


No comments:

Post a Comment