Thursday, December 22, 2016

ஓலமிட்டாய் (காலமகள் கைகொடுப்பாள்)

***


ஓலமிட்டாய் கை நொடித்தாய் அப்பப்பா
ஓர் நாள் இருட்டால் சாபமிட்டால் என்னப்பா
(2)
பார் முழுதும் வாழ்வெதற்கு என்றப்பா
பலர் துடிக்கும்-குரல் கேட்கலையா சொல்லப்பா
ஓலமிட்டாய் கை நொடித்தாய் அப்பப்பா
ஓர் நாள் இருட்டால் சாபமிட்டால் என்னப்பா
(MUSIC)
சின்னச்சின்ன துன்பமெல்லாம் பாடங்களை சொல்லுதப்பா 
நாமதனால் கொள்வதெல்லாம் அமைதி தானப்பா 
(2)
(Short Music)
ஒரு பொழுது துன்பம் வரும் மறு பொழுதில் இன்பம் வரும் 
இருளினிலும் வழி தெரியும் கோபம் ஏனய்யா அய்யா சாபம் ஏனப்பா 
ஐயா அமைதி கொள்ளப்பா 
(Short Music)
ஓலமிட்டாய் கை நொடித்தாய் அப்பப்பா
ஓர் நாள் இருட்டால் சாபமிட்டால் என்னப்பா 
(MUSIC)
ஆ ..
கற்..றிருக்கும் மேதைக்கெல்லாம் அறிவு-சொல்லும் வண்ணம்
இடித்துரைக்கும் வசவு-தந்தாய் போதும்-உந்தன் கோபம்
(1+SM+1)
நெஞ்சுக்குள்ளே வலியைப் பொறுத்திருந்தே வாழ்வை 
என்றைக்குமே அனுபவிக்கும் பேரைப்-பாரப்பா  
அய்யா நினைத்துப் பாரப்பா  .. ஐயா உனக்குத் தொல்லையா
(Short Music)
ஓலமிட்டாய் கை நொடித்தாய் அப்பப்பா
ஓர் நாள் இருட்டால் சாபமிட்டால் என்னப்பா

No comments:

Post a Comment