Showing posts with label இதர பிற. Show all posts
Showing posts with label இதர பிற. Show all posts

Friday, February 14, 2020

8 வாட்ஸப்ப்பு ஃபேஸ்புக்கென்று (வள்ளிக்கணவன் பேரை)





வாட்ஸப்ப்பு Faceபுக்கென்று வையத்திலே எல்..லோரும் (3) 
நட்பிற்-சி..றந்தாரடி கிளியே (2)
கூடி இருந்தாரடி
கிளியே கூடி இருந்தாரடி (3)

நாடுவிட்டுப் போனாலென்ன USA-என்..றானாலென்ன (2)
ரொம்பதூரம் போனாலென்ன கிளியே (3)
faceபுக்கு போதுமடி துணையாய் வாட்ஸப்பி..ருக்..கு..தடி 
துணையாய் வாட்ஸப்பி..ருக்..கு..தடி
Faceபுக் வாட்ஸப்ப்பு போதுமடி

போஸ்ட்கார்டு இன்லேண்ட்-லெட்டர் மஞ்சள்-கவர் என்பதெல்லாம் (2)
வேடிக்கையல்லவோடி கிளியே  
வேடிக்கையல்லவோடி கிளியே
வேடிக்கையல்லவோடி இன்று
வேலைக்கு ஆகுமோடி கிளியே
அதின்னாளில் போதுமோடி கிளியே 
அதின்னாளில் போதுமோடி

என்றும் இணைத்திருக்கும் ஒட்டியும்-ஒட்..டா து..வைக்கும் (2)
facebook-நம் ஆணைப்படி கிளியே (2)
உதவிட-வேறேதடி கிளியே (3)
உதவ அதுதானடி.. உதவ அதுதானடி.. உதவ அதுதானடி...


Saturday, February 8, 2020

7. செல்லினை விட்டின்று(வில்லினையொத்த புருவம்)



செல்லினை விட்டின்று வாழ்வது-என்பது ஆகுமா-இனி ஆகு மா
(3)
இன்று  நட்பு-நெ..ருங்கிப்-ப..ல..ருறவானது செல்லினால் அந்த செல்லினால்
நட்பில் பேசி-நெருங்கிப்-ப..ரஸ்பரம் ஆனது செல்லினால் அந்த
செல்லினால்

செல்லினைக் கேடென்றெ..டுத்துரைப்பார் பலர்-மண்ணிலே இன்று-நம்மிலே
(2)
என்றும் முற்றும்-ஓர்-கேடெனச் செல்லினை (3)
என்றும் முற்றும் ஓர்-கேடெனச் செல்லினைச்-சொல்வது நேரில்லே அது கூரில்லே
(2)
அது நேரில்லே அது-கூரில்லே

கல்லை-உ..ரசித்-தீ மூட்டிச்-சமைத்திடல் ஆகுமோ இன்று-ஆகுமோ
(3)
அந்த GAS கரெண்ட்டால் பல்ல..பாயங்கள் உள்ளது என்பதால்-அது பொல்லதா
அந்த GAS கரெண்ட்டால் பல்ல..பாயங்கள் உள்ளது என்பதால்-முற்றும் பொல்லதா
 
நல்லதைக்-கூட்டி ஓர்-பொல்லதைச் சேர்த்தன்றோ
ஆக்குறான் அந்த-ஆண்டவன்
(3)
அதில் நல்லதை மட்டும் எடுத்து (2)
அதில் நல்லதை மட்டும் எடுத்து நலம்-பட வாழுவோம்
என்றும் வாழுவோம்
(2)
நாம் வாழுவோம் என்றும் வாழுவோம்
நாம் வாழுவோம் என்றும் வாழுவோம்



Thursday, February 6, 2020

இதர பிற



4. ஓலமிட்டாய் (காலமகள் கைகொடுப்பாள்)-Power Cut
5. ஒன்றா இரண்டா (ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல) - FACEBOOK
6. ஓடி விளையாடு தாத்தா (ஓடி விளையாடு பாப்பா ) - Whatsapp
7. செல்லினை விட்டின்று(வில்லினையொத்த புருவம்) - Cell PHONE
8. வாட்ஸப்ப்பு   ஃபேஸ்புக்கென்று (வள்ளிக்கணவன் பேரை) FACEBOOK Whatsapp
9. ஆயிரம் ஆயிரம் (ஆயிரம் கோடி நிலவுகள்) ** PM's request for Lamps for Corona
10 ராணுவச் சோதரர்
11 இன்றைய தளிகை











Tuesday, January 24, 2017

அந்த காக்கா நம்ம சொந்த காக்கா




எப்படியோ வந்திடுதே அந்த-காக்கா 
கணம் தப்பாம-வரும்-அது என்ன-க்ளாக்கா
வந்து-வந்துச் சாப்பிட..நிந்து-நிந்துக் கூப்பிடும் 
எங்க-வீட்டு ஜன்னலிலே அந்த-காக்கா
சட்டமாக வந்து-நின்னு சத்தமாக்-க..ரைஞ்சு-பொண்ணு 
போலத்-தலை சாச்சுப்-பாக்கும் ரொம்ப-ஷோக்கா
எப்படியோ வந்திடுதே அந்த-காக்கா 
கணம் தப்பாம-வரும்-அது என்ன-க்ளாக்கா
தத்தித்-தத்தி கிட்ட-வந்து கொத்திக்-கொத்தித் தின்னுமது
நான்-கொடுக்கும் பூந்தி-எல்லாம் ரொம்ப-பாங்கா
கெட்டித்தயிர் வச்ச-இடம் சுத்தமாமாய்ப்-ப..ளிச்சிடவே
துளி-மிச்சம் வைக்காம நக்கும்-நேக்கா
எப்படியோ வந்திடுதே அந்த-காக்கா 
கணம் தப்பாம-வரும்-அது என்ன-க்ளாக்கா
பால்-தயிரின் மேலே-உள்ள அந்த-ஏடு 
அதை ஓடிவந்து தின்னும்-அது ஆர்வத்தோடு
கூவிக்-கூடி ஒத்துமையாத் தின்னும்-பீடு 
அதப் பாக்குற-நாம் சண்டை-போட்டா வெக்கக்-கேடு
எப்படியோ வந்திடுதே அந்த-காக்கா 
கணம் தப்பாம-வரும்-அது என்ன-க்ளாக்கா
பிச்சிப்-போடும் இட்டிலியத் தொட்டிடாது 
அது கேட்டதை-நாம் தந்திடாம விட்டிடாது
ஏமாத்த இடம்-அது தந்திடாது 
என்றும் ஒம்-பருப்பு-அதுங்கிட்ட வெந்திடாது
எப்படியோ வந்திடுதே அந்த-காக்கா 
கணம் தப்பாம-வரும்-அது என்ன-க்ளாக்கா
நாம-போனா சொத்துச்-சண்டை முத்திப்-போகும் 
காக்கா ஒண்ணு-போனா சுத்திக்-கத்தி துக்கம்-காட்டும் 
எத்தனையோ பாடம்-அது சொல்லிக்காட்டும்
அது அத்தனைக்கும்-அஞ்சறிவு ப்ராணியாக்கும்
எப்படியோ வந்திடுதே அந்த-காக்கா 
கணம் தப்பாம-வரும்-அது என்ன-க்ளாக்கா
வெண்ணையின்னா அதுக்கு-பார் ரொம்பப்-பிடிக்கும் 
அதைத் கேட்டுக்-கேட்டுக் கொஞ்ச-நேரம் அடம்-பிடிக்கும்
என்னத்தைத்-தான் தின்னாலும் அனுபவிக்கும் 
நான் இல்லையின்னு சொன்னாலும் அனுசரிக்கும்
எப்படியோ வந்திடுதே அந்த-காக்கா 
கணம் தப்பாம-வரும்-அது என்ன-க்ளாக்கா
பூரி-ரொட்டி வைக்க-நூறு தின்னும்-காக்கா 
அது சொந்த-ஊரு-வடக்கத்தி டில்லியோ அக்கா 
எங்கிருந்து வந்தாலும் என்னமோ-அக்கா
என் குடும்பத்தில்-ஒண்ணு-பட்ட சொந்த-காக்கா

பித்துருக்கள் நம்மப்-பாக்க எண்ணுவாங்களாம் 
அந்த-காக்கா-போல வந்து-சோறு தின்னுவாங்களாம்
என்று-கதைச் சொல்லி-பண்பு ஊட்டுவாங்கலாம் 
எல்லா ஜீவனிலும் ஆண்டவனைக் காட்டுவாங்கலாம்

கட்டுக்-கதை என்று-சிலர் கேலி-பேசலாம்
அதைக் கண்டுக்காம விட்டுட்டு-நாம் அன்பைப்-பூணலாம் 
ஒண்ணொண்ணுக்கும் தேகம்-ரூபம் வேற-ஆகலாம்
அதை விட்டு-உள்ளப் போனாத்தான்-நாம் சாமி-பாக்கலாம்..!

எப்ப-வேணா வந்திடு-நீ எங்க-காக்கா 
ஒன்ன பாக்கலைன்னா போகும்-அந்த நாளு-ராங்கா 
சும்மா-இல்லை நெஜத்தைத்-தான் சொல்லுறேன்-காக்கா 
அம்மா-உன்னைப் போகச்-சொல்ல நான்-என்ன மக்கா..!
எப்ப-வேணா வந்திடு-நீ எங்க-காக்கா 
ஒன்ன பாக்கலைன்னா போகும்-அந்த நாளு-ராங்கா
---------------------



இன்னும் பிற




Friday, January 20, 2017

இன்றைக்கு நேற்றிலை (மெட்டு: நெஞ்சுக்கு நீதியும் by M.S அம்மா)-ஜல்லிக்கட்டு


(ஜல்லிக்கட்டு)

இன்றைக்கு-நேற்றிலை என்றைக்கும்-வாழும் உயர்ந்த-தமிழ் வழக்கம் (2)
எங்கிருந்தோ-இங்கு வந்தவர் தடை-இட ஓங்கும்-தமிழ் முழக்கம்
நெஞ்சினில்-ஒன்றித் துயில்-இன்றிச் சோறின்றி நற்றமிழ்-மாந்தரெல்லாம் (2)
ஒன்று-பட்டார் கடலின்-அருகே கடல்-போல் கடல்-போல் கடல்-போல் (2)

மாட்டுக்குப்-பார் வலி என்ற-உரை-தனை ஆட்சியர் நம்பிவிட்டார் (2)
கும்பிட-வேண்டிய தெய்வம்-*அம்மாடென கும்பிடுவோம்-தினமே
எம்-துக்கம் போக்கும் நலம் தரும்-ஆட்டத்தை துன்பம் என்றால்-எப்படி (2)
மாடுகள் எங்கட்கு வாழ்வு தரும் அன்னை போல் அன்னை போல் அன்னை போல் (2)

வெள்ளை-மனம் தமிழ்ப் பிள்ளை-மனம் தனை லேசில்- நினைத்ததனால் (3)
எங்கள் கலை தனை வீணில்-செருக்கொடு எள்ளி நகை புரிந்தார்
எள்ளத்தனை அளவும் நிஜமின்றி விடாது-தடை செய்யவே (2)

வெள்ளம் எனத் திரண்டான் தமிழன் கடல்-போல் கடல்-போல் கடல்-போல் (2)

Thursday, December 22, 2016

ஓலமிட்டாய் (காலமகள் கைகொடுப்பாள்)

***


ஓலமிட்டாய் கை நொடித்தாய் அப்பப்பா
ஓர் நாள் இருட்டால் சாபமிட்டால் என்னப்பா
(2)
பார் முழுதும் வாழ்வெதற்கு என்றப்பா
பலர் துடிக்கும்-குரல் கேட்கலையா சொல்லப்பா
ஓலமிட்டாய் கை நொடித்தாய் அப்பப்பா
ஓர் நாள் இருட்டால் சாபமிட்டால் என்னப்பா
(MUSIC)
சின்னச்சின்ன துன்பமெல்லாம் பாடங்களை சொல்லுதப்பா 
நாமதனால் கொள்வதெல்லாம் அமைதி தானப்பா 
(2)
(Short Music)
ஒரு பொழுது துன்பம் வரும் மறு பொழுதில் இன்பம் வரும் 
இருளினிலும் வழி தெரியும் கோபம் ஏனய்யா அய்யா சாபம் ஏனப்பா 
ஐயா அமைதி கொள்ளப்பா 
(Short Music)
ஓலமிட்டாய் கை நொடித்தாய் அப்பப்பா
ஓர் நாள் இருட்டால் சாபமிட்டால் என்னப்பா 
(MUSIC)
ஆ ..
கற்..றிருக்கும் மேதைக்கெல்லாம் அறிவு-சொல்லும் வண்ணம்
இடித்துரைக்கும் வசவு-தந்தாய் போதும்-உந்தன் கோபம்
(1+SM+1)
நெஞ்சுக்குள்ளே வலியைப் பொறுத்திருந்தே வாழ்வை 
என்றைக்குமே அனுபவிக்கும் பேரைப்-பாரப்பா  
அய்யா நினைத்துப் பாரப்பா  .. ஐயா உனக்குத் தொல்லையா
(Short Music)
ஓலமிட்டாய் கை நொடித்தாய் அப்பப்பா
ஓர் நாள் இருட்டால் சாபமிட்டால் என்னப்பா