(ஜல்லிக்கட்டு)
இன்றைக்கு-நேற்றிலை
என்றைக்கும்-வாழும் உயர்ந்த-தமிழ் வழக்கம் (2)
எங்கிருந்தோ-இங்கு
வந்தவர் தடை-இட ஓங்கும்-தமிழ் முழக்கம்
நெஞ்சினில்-ஒன்றித்
துயில்-இன்றிச் சோறின்றி நற்றமிழ்-மாந்தரெல்லாம் (2)
ஒன்று-பட்டார் கடலின்-அருகே
கடல்-போல் கடல்-போல் கடல்-போல் (2)
மாட்டுக்குப்-பார்
வலி என்ற-உரை-தனை ஆட்சியர் நம்பிவிட்டார் (2)
கும்பிட-வேண்டிய தெய்வம்-*அம்மாடென
கும்பிடுவோம்-தினமே
எம்-துக்கம் போக்கும்
நலம் தரும்-ஆட்டத்தை துன்பம் என்றால்-எப்படி (2)
மாடுகள் எங்கட்கு வாழ்வு
தரும் அன்னை போல் அன்னை போல் அன்னை போல் (2)
வெள்ளை-மனம் தமிழ்ப்
பிள்ளை-மனம் தனை லேசில்- நினைத்ததனால் (3)
எங்கள் கலை தனை வீணில்-செருக்கொடு
எள்ளி நகை புரிந்தார்
எள்ளத்தனை அளவும் நிஜமின்றி
விடாது-தடை செய்யவே (2)
வெள்ளம் எனத் திரண்டான்
தமிழன் கடல்-போல் கடல்-போல் கடல்-போல் (2)
No comments:
Post a Comment