Showing posts with label ஜல்லிக்கட்டு. Show all posts
Showing posts with label ஜல்லிக்கட்டு. Show all posts

Friday, January 20, 2017

உண்மை அறிவும் இன்றி(நெஞ்சில் உரமும் இன்றி – பாரதியார்)-ஜல்லிக்கட்டு


ஜல்லிக்கட்டு போச்சா..!
(MUSIC)
உண்மை அறிவும் இன்றி உண்மைப் புரிவும் இன்றி
தீர்ப்பினைத் தந்தாரடி கிளியே ஈதென்ன கோரமடி
(MUSIC)
சட்டென்று நீதி-என்று நம்-நாட்டு நீதி-ஒன்றை (2)
வெட்டித் துணித்தாரடி கிளியே (2)
செய்ததறியாரடி.. கிளியே
உண்மை அறிவும் இன்றி உண்மைப் புரிவும் இன்றி
தீர்ப்பினைத் தந்தாரடி கிளியே ஈதென்ன கோரமடி
(MUSIC)
அந்தப்-பி…ராணி-தன்னைத் தின்பவர் கொல்லக்-கண்டும்
அந்தப்-பி…ராணி-தன்னைத் இன்றைக்கும் கொல்லக்-கண்டும் 
சிந்தை இரங்காராடி கிளியே (2)
உண்மை மறந்தாரடி
கிளியே
உண்மை அறிவும் இன்றி உண்மைப் புரிவும் இன்றி

தீர்ப்பினைத் தந்தாரடி கிளியே ஈதென்ன கோரமடி


இன்னொரு பாடல்-ஜல்லிக்கட்டு
இன்னும் பிற

இன்றைக்கு நேற்றிலை (மெட்டு: நெஞ்சுக்கு நீதியும் by M.S அம்மா)-ஜல்லிக்கட்டு


(ஜல்லிக்கட்டு)

இன்றைக்கு-நேற்றிலை என்றைக்கும்-வாழும் உயர்ந்த-தமிழ் வழக்கம் (2)
எங்கிருந்தோ-இங்கு வந்தவர் தடை-இட ஓங்கும்-தமிழ் முழக்கம்
நெஞ்சினில்-ஒன்றித் துயில்-இன்றிச் சோறின்றி நற்றமிழ்-மாந்தரெல்லாம் (2)
ஒன்று-பட்டார் கடலின்-அருகே கடல்-போல் கடல்-போல் கடல்-போல் (2)

மாட்டுக்குப்-பார் வலி என்ற-உரை-தனை ஆட்சியர் நம்பிவிட்டார் (2)
கும்பிட-வேண்டிய தெய்வம்-*அம்மாடென கும்பிடுவோம்-தினமே
எம்-துக்கம் போக்கும் நலம் தரும்-ஆட்டத்தை துன்பம் என்றால்-எப்படி (2)
மாடுகள் எங்கட்கு வாழ்வு தரும் அன்னை போல் அன்னை போல் அன்னை போல் (2)

வெள்ளை-மனம் தமிழ்ப் பிள்ளை-மனம் தனை லேசில்- நினைத்ததனால் (3)
எங்கள் கலை தனை வீணில்-செருக்கொடு எள்ளி நகை புரிந்தார்
எள்ளத்தனை அளவும் நிஜமின்றி விடாது-தடை செய்யவே (2)

வெள்ளம் எனத் திரண்டான் தமிழன் கடல்-போல் கடல்-போல் கடல்-போல் (2)