Friday, February 14, 2020

8 வாட்ஸப்ப்பு ஃபேஸ்புக்கென்று (வள்ளிக்கணவன் பேரை)





வாட்ஸப்ப்பு Faceபுக்கென்று வையத்திலே எல்..லோரும் (3) 
நட்பிற்-சி..றந்தாரடி கிளியே (2)
கூடி இருந்தாரடி
கிளியே கூடி இருந்தாரடி (3)

நாடுவிட்டுப் போனாலென்ன USA-என்..றானாலென்ன (2)
ரொம்பதூரம் போனாலென்ன கிளியே (3)
faceபுக்கு போதுமடி துணையாய் வாட்ஸப்பி..ருக்..கு..தடி 
துணையாய் வாட்ஸப்பி..ருக்..கு..தடி
Faceபுக் வாட்ஸப்ப்பு போதுமடி

போஸ்ட்கார்டு இன்லேண்ட்-லெட்டர் மஞ்சள்-கவர் என்பதெல்லாம் (2)
வேடிக்கையல்லவோடி கிளியே  
வேடிக்கையல்லவோடி கிளியே
வேடிக்கையல்லவோடி இன்று
வேலைக்கு ஆகுமோடி கிளியே
அதின்னாளில் போதுமோடி கிளியே 
அதின்னாளில் போதுமோடி

என்றும் இணைத்திருக்கும் ஒட்டியும்-ஒட்..டா து..வைக்கும் (2)
facebook-நம் ஆணைப்படி கிளியே (2)
உதவிட-வேறேதடி கிளியே (3)
உதவ அதுதானடி.. உதவ அதுதானடி.. உதவ அதுதானடி...


No comments:

Post a Comment