Why search for GOD the OMNI Present, who is present in me
too?
There has been this question in many a minds (every
mind?) and has been asked many a times.
I am neither trying to answer nor question this question.
But, thought some thoughts on this will help us while-away a little-while in a
worth-while manner..!
(ஐயா சாமி ..! இப்பவே
கண்ணைக் கட்டுதேன்னு சொல்றது காதுல விழுது ..இருந்தாலும் தொடர்கிறேன்..☺
அறிவுப் பூர்வமாக நாம் தெரிந்து கொண்ட உண்மையை உணர்வு பூர்வமாகப்
புரிந்து கொள்ள மேற்கொள்ளும் முயற்சியே இறை தேடல் என்று கொள்ளலாம். . ( Listen to the speech on the difference between Gnaana
and Knowledge by Rajaji that appears as an introductory talk in M.S’s Bhajagovindam
Cassete)
It’s a journey from Saguna Brahmam to Nirguna Brahmam.
According to Aadhi Sankara’s advaitha philosophy, God is
supra consciousness and so is jeevaathma. But Jeevaathma does not know this. ஜீவாத்மா
இதை உணர்தலே (OMNI உணர்வுறுதலே) முக்தி எனப்படுகிறது. தனி சக்தி என்ற நினைப்பிலிருந்து
இறை முக்தி என்னும் உணர்தலுக்கு ஒரு முயற்சி ஒரு சாதனை தேவைப் படுகிறது அதுதான் இறை
தேடல். எங்கு தேடிக் காண்கிறாய் என்பது முக்கியமில்லை; கண்டு கொள்ளுதலே முக்கியம். காணும் உந்துதலே முக்கியம். அதையே தேடல்
என்று சொல்கிறார்கள்.
Search is not founded on doubt, it’s founded on faith. இருக்கு
என்ற நம்பிக்கையில் தேடுவதே இறை தேடல்.
“இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி போவது ஏனோ” –When one says God is Everywhere, the above
question itself answers it …
இல்லாத இடம் என்று ஒன்றே இல்லை எனவே இல்லாத இடம் தேடித் போவது
என்பதும் இறைவன் இருக்கும் இடத்தைத் தேடிப் போவது தான். இறை நம்பிக்கை வந்த பிறகு
, தேடல் என்பது நாடல் என்று ஆகிவிடும். எனவே இறை தேடல் என்பது இறை நாடலே. இறைவனை எங்கும்
என்றும் நாடிச் செல்லலாம்..!
In context of Search ( Not necessarily directly connected
with this topic), I want to bring out an interesting anomaly..!
“கள்ளிருக்கும் மலர்க்கூந்தல்
ஜானகியை மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனப் புகுந்து
தடவியதோ ஒருவன் தன் புனித வாளி “
ராமரின் பாணங்களால் துளைத்துச் சல்லடையாக்கப்பட்ட உடலைப் பற்றி
கம்பர் வர்ணிக்கிறார்.
ராவணனின் உடலை துளைத்த வாளி(அம்பு) ,ஒவ்வொரு அணுவிலும் புகுந்து ஜானகியைக்
கவர்ந்த காதல் உள்ளே இருக்கிறதா என்று தேடியது
போல் உள்ளது என்று சொல்கிறார் கம்பர். (தடவியது என்பது அணு அணுவாகத்
துளைத்துத் தேடியது என்றாகும்)
இதன் பொருள் கீழ்க்கண்ட இரண்டுமாகக் கொள்ளலாம்
1)
தேடித் தேடிப் பார்த்துவிட்டது; ராவணன் செத்தது தான் மிச்சம் காதல் அங்கு எள்ளளவும்
இல்லை.
2)
தோண்டித் துருவி எள்ளத்தனையும் மிச்சம் வைக்காமல் இருக்கும் காதலைக் களைந்து எடுத்து விட்டது ராமன்
வாளி
இதில் எது சரி ? ( இரண்டும் சரி என்பது சரியா ? )
நல்லவற்றைத் தேடும் போது, இருக்கும் என்ற நம்பிக்கையுடனும் பொல்லாதவற்றைத்
தேடும்போது , இருக்கக் கூடாது, இல்லாமல் போகாதோ என்று நினைத்தும் தேடுவது சான்றோர்
இயல்பு.
“குணம் நாடிக் குற்றமும் நாடி
அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல்”
என்பது சான்றோர் இயல்பு என்று வள்ளுவர் கூறுகிறார்.
ஆனால் இறைவனின் இயல்போ;
“குணம் நாடி குற்றமும் நாடி
அவற்றை குணம் ஆக்கி மிக்கக் கொளல்” என்றாகிறது.
ராமாயணத்தில் ராமரை விட ராவணனைப் புகழ்ந்தவர் யாருமில்லை என்பதே இதற்கு ஒரு சான்று.
____________________
“அண்டம் படைத்திங்கு
எல்லாமும் ஆனவன்
அணுவின் உள்ளேயும்
அணுவே நீ ஆனவன்
தொண்டர்கள் உள்ளத்தில்
உறைகின்ற ஆண்டவன்
என்னிலும் உள்ளோனே "
No comments:
Post a Comment