Monday, December 18, 2017

1 நோய் சென்று ஓடி நீ தேற வேண்டும்(தாலாட்டு பாடி)




நோய் சென்று ஓடி நீ-தேற வேண்டும் தாளாத அவர்-தாபம் அம்மம்மா
மனம் தாளாத அவர்-தாபம் அம்மம்மா 
போகாத அவர்-தாபம் அம்மம்மா
(1+SM+1)
(MUSIC)
கண்ணாளர் உன்னைக் கண்ணாகக் கொண்டே –
இமைபோலக் காத்தாரே அம்மம்மா
(2)
சேயாக நீயாகத் தாயாக-மாறி
சீராட்டி-நின்றாரே அம்மம்மா
நோய் சென்று ஓடி நீ-தேற வேண்டும் தாளாத அவர்-தாபம் அம்மம்மா
மனம் தாளாத அவர்-தாபம் அம்மம்மா 
போகாத அவர்-தாபம் அம்மம்மா
(MUSIC)
சோராது கூறாது ஒருபோதும்-ஓயாது உனைப்-பார்த்துப் பணி-செய்தார் தாயே
சுமையாக-நீயில்லை எனச்-சொல்லி அவர்-ஆற்றும்
அத்-தொண்டு உயர்-யோகத் தீயே 
அம்மா.. !
அவர் ஏற்றும் உயர்-யோகத் தீயே
இறைவனை-ஏன் எரிக்கவில்லை 
அவன்-மனமோர் அப்பா கல்லின்-மலை
நோய் சென்று ஓடி நீ-தேற வேண்டும் தாளாத அவர்-தாபம் அம்மம்மா
மனம் தாளாத அவர்-தாபம் அம்மம்மா 
போகாத அவர்-தாபம் அம்மம்மா
(MUSIC)
அன்பான-சொந்தங்கள் அபிமான-உள்ளங்கள் 
எல்லார்க்கும் பல-உண்டு தாயே 
அவையாவும் கொடுக்காத இதம்-தன்னை நனி-பெற்றாய் 
கண்ணாளன்- வடிவாக நீயே
அரும்-பெரும்-தாய் அவர்-உனக்கும்
தாய் வடிவாய் பிள்ளை எவர்க்கிருக்கும் 
நோய் சென்று ஓடி நீ-தேற வேண்டும் தாளாத அவர்-தாபம் அம்மம்மா
மனம் தாளாத அவர்-தாபம் அம்மம்மா 
போகாத அவர்-தாபம் அம்மம்மா



No comments:

Post a Comment