Tuesday, December 26, 2017

2 நீ இருப்பாயோ இனி அமைதி கண்டு(அவன் நினைத்தானா இது நடக்குமென்று)



நீ இருப்பாயோ இனி அமைதி கண்டு (2)
(1+SM+1)
அவன் மடி-புகுந்தே-உன் வலி-மறந்து
மடி-புகுந்தே-உன் விதி-கரைந்து
நீ இருப்பாயோ இனி அமைதி கண்டு (2)
(MUSIC)
உந்தன் மாபெரும்-நெஞ்சுரம் யார்க்கு-வரும் 
அது கோழையின்-நெஞ்சிலும் வீரம்-தரும்
(2)
என்றும் பாண்டுரங்கன்-பேர் கூறிவரும் 
உன் வாழ்வினுக்கீடாய் ஏது-தவம்
நீ இருப்பாயோ இனி அமைதி கண்டு (2)
(MUSIC)
அன்று எங்கிருந்தோ எமைத் தேடி-வந்தாய் 
வந்து வாழ்க்கையில் கீதையின் சாரம்-தந்தாய்
(2)
நல்ல பாடம்-தந்தாய்-நீ மெய் விடுத்தாய் 
பலர் வாழ்ந்திருப்பார் அதை நெஞ்சில்-கொண்டு
நீ இருப்பாயோ இனி அமைதி கண்டு (2)
(MUSIC)
உன்னைப் பார்ப்பவர் மனதில் கசிவெடுக்க 
உடன் சோகத்தில் ஆழ்ந்து-தன் நிலை-மறக்க
பார்ப்பவர் மனதில் கசிவெடுக்க 
உடன் சோகத்தில் ஆழ்ந்து-தன் நிலை-மறக்க
 உன்னை ஆற்றிடவே அவர் வந்திருக்க 
நீ தேற்றி நின்றாய் உந்தன் முகம் சிரிக்க
நீ இருப்பாயோ இனி அமைதி கண்டு (2)
அவன் மடி-புகுந்தே-உன் வலி-மறந்து
மடி-புகுந்தே-உன் விதி-கரைந்து
நீ இருப்பாயோ இனி அமைதி கண்டு (2)




No comments:

Post a Comment