Friday, March 29, 2019

பெரியப்பா - V.N.Srinivasan




(மறைவு 29-MAR-2019)

புன்னகையைப் பொன்னகையாய் மென்சொல்லைத் தனிச்சுவையாய்
சொல்லுவராய் நல்லவராய் விளங்கு-பெரும் தந்தையுமாய்
ஏற்றத்தில்-மன்னவராய் தோற்றத்தில்-சின்னவராய்
இருந்ததனால் சின்னி-என்றே பெயர்-கொண்டு திகழ்ந்தவராய்
இருந்த-உன்னை உறவினராய்ப் பெற்று-இன்று பிரிந்ததனால்
மனதுக்குள்ளே அழுதிடுவேன் பாடி-உன்னைத் தொழுதிடுவேன் 

முதுமை-வந்து சேர்ந்ததனால் நினைவு-தளர்..வடைந்ததுவாய்
உனது-நிலை கூறிடலாம் உலகில்-பலர் பேசிடலாம்
பயிர்-முதிர்ந்தால் தளர்வடைதல் போல-துளி தலை-சாய்க்கும்
எனினும்-அது பொன்நெல்லின் சேர்க்கையினால் மிடுக்கு-கொள்ளும்
என்பது-போல் மன்பதையின்  நினைவினை-நீ மறந்ததுவும்     
ஆண்டவனின்  மலரடியில்  உன் நினைவை வைத்ததனால்..!

----------------------------


No comments:

Post a Comment