விருத்தம்
மகனே
இருக்கேன்-நான் கலங்காதே எனவே
நீ சொல்லும்-மொழி கேட்டிடவே
ஆசை
கொண்டேனப்பா
இன்று-மொழி
கேட்டிடவே ஆசை கொண்டேனப்பா
____________________________________________________
ஆயிரமாய் நிறைகளையே நீ-எனக்களித்தாய் நீ-எனக்களித்தாய்
(1+SM+1)
அப்பா ஆயினுமோர்-குறையளித்தாய் நீ-உந்தன் பிரிவால்
இப்போ நானழுமோர் குறையளித்தாய் நீ-உந்தன் பிரிவால்
ஆயிரமாய் நிறைகளையே நீ-எனக்களித்தாய் நீ-எனக்களித்தாய்
(MUSIC)
பூமி..யில்-நீ இருக்கிற-நாள் வரையினில்-நான் ஹீரோ
பூமி-விட்டு போன-பின்னே ஆகிப்புட்டேன் ஜீரோ
ஓயும்போது சாஞ்சுக்கவே தோள்-கொடுக்க யாரோ
ஆயிரமாய் நிறைகளையே நீ-எனக்களித்தாய் நீ-எனக்களித்தாய்
(MUSIC)
அறிவுரைகள் கொடுக்க-உன்போல் யாராலே ஆகும்
நோகும்போது உன்முகத்தைக் கண்டாலே போதும்
போகும் போகும் எனது நோவும் காணாமல் போகும்
(MUSIC)
என்னிடத்தில் உள்ளதெல்லாம் என்-திறமா கூறு (2)
என்-தகப்பா உன்னறிவுத் தீயின்-முன்னே தூசு (2)
புத்தகத்தில்-படித்ததெல்லாம் கக்கிக்கிட்டுத் திரியும்..ஆ...ஆ..
புத்தகத்தில்-படித்ததெல்லாம் கக்கிக்கிட்டுத் திரியும்
பிள்ளைக்கு-நீ சொல்லாமல் எதுவும் என்ன புரியும்
பிள்ளைக்கு-நீ சொல்லாமல் எதுவும் என்ன புரியும்
இன்னைக்கு-நீ இல்லாமல் எனக்கு-ஞானம் சூன்யம்
ஆயிரமாய் நிறைகளையே நீ-எனக்களித்தாய் நீ-எனக்களித்தாய்
ஏன் எனைப் பிரிந்தாய்.. ஏன் எனைப் பிரிந்தாய்..
No comments:
Post a Comment