Showing posts with label அப்பா. Show all posts
Showing posts with label அப்பா. Show all posts

Wednesday, October 12, 2022

28.ஆண்டவன் வந்தான் நமைக் காத்து நின்றான் **

 


ஆண்டவன் வந்தான் நமைக் காத்து நின்றான் 
பூலோக வாழ்வில் தந்தை தாயாக
தன்னலம் இன்றி நமக்காக எங்கும் வேராறுமே இல்லையே 
ஆண்டவன் வந்தான் நமைக் காத்து நின்றான் 
பூலோக வாழ்வில் தந்தை தாயாக
(MUSIC)
பிள்ளைகள் உதைத்தும் மிதித்தும் என்றைக்கும் இதத்தைக் கொடுக்கும் (2) 
தாயை  நீ பார் 
என்றென்றும் உழைத்தே இளைத்தும் பிள்ளைக்குச் சிறப்பே கொடுக்கும் 
தந்தையைப் பார்
நிலவுபோல்  தாய் முகம் ஆக்குமே பரவசம் 
வாழ்விலே தைரியம் தந்தை தான் இது நிஜம் 
ஆண்டவன் வந்தான் நமைக் காத்து நின்றான் 
பூலோக வாழ்வில் தந்தை தாயாக
 (MUSIC)
சென்றங்கு கண் மூடும் வரைக்கும்  என்றைக்கும் சேய் நன்மை நினைக்கும் (2) 
தாய்மையாகும்
என்றென்றும் பிள்ளைக்கே உழைக்கும் விந்தைக்கு இருக்கும் ஒரே பேர் 
தந்தையாகும் 
அன்புதான் தாய் மனம் தந்தையோ கரிசனம்
கண்டபின் வேண்டுமோ ஆண்டவன் தரிசனம்
ஆண்டவன் வந்தான் நமைக் காத்து நின்றான் 
பூலோக வாழ்வில் தந்தை தாயாக
தன்னலம் இன்றி நமக்காக எங்கும் வேராறுமே இல்லையே 
ஆண்டவன் வந்தான் நமைக் காத்து நின்றான் 
பூலோக வாழ்வில் தந்தை தாயாக



Sunday, June 19, 2016

3 ஆண்டவன் கூட அப்புறம்(ஆண்டவன் முகத்தைப் பாக்கணும்)




ஆண்டவன்-கூட அப்புறம் நான் வணங்கிடும் அப்பாவுக்கு-அப்புறம்
(2)
அப்பா-சாமி என்று-படிச்சேன் அந்த-படிப்பினையே கடைப் பிடிச்சேன்
(2)
ஆண்டவன்-கூட அப்புறம் நான் வணங்கிடும் அப்பாவுக்கு-அப்புறம்
(MUSIC)
குணமிருந்தால்-எந்த குறையுமில்லே எனும்-உந்தன் வாழ்க்கையப்பா 
நீ பதவியிலேயும் பதவிசைக் காட்டி வாழ்ந்தது பாடமப்பா 
(1+SM+1)
படிப்பால்-இல்லை பணத்தால்-இல்லை குணத்தால்-மேன்மை என்ற அப்பா
ஆண்டவன்-கூட அப்புறம் நான் வணங்கிடும் அப்பாவுக்கு-அப்புறம்
(MUSIC)
நண்பர் ன்றே பலர்-எனக்கிருந்தும் நீ-அதில் முதல்வன் அப்பா 
தலைவன் என்றே இருப்பினும்-நீயோ முழுமுதற்-தொண்டனப்பா 
(1+SM+1)
பழுதாய்-அல்ல முழுதாய்-என்னை ஆக்கிய-பெருமை உனக்கு -அப்பா 
ஆண்டவன்-கூட அப்புறம் நான் வணங்கிடும் அப்பாவுக்கு அப்புறம்
(MUSIC)
ஒவ்வொரு தந்தையும் இறைவன் எ-ன்பது ஒருநாள் விளங்குமப்பா
பலமாய் விளங்கிய் தந்தையைப்பேணல் பிள்ளையின் கடனல்லவா
(SM)
ஒவ்வொரு பிள்ளைக்கும் இறைவன் எ-ன்பது அவரவர் கொண்ட-அப்பா 
அவரவர் தந்தையைப் பேணுதல்போற்றுதல் அவர்பெற்ற வரமல்லவா

உயர்வே தந்து உயிரை தந்து வளர்த்தது தந்தை தானல்லவா
ஆண்டவன் கூட அப்புறம் நான் வணங்கிடும் அப்பாவுக்கு அப்புறம்
அப்பா சாமி என்று படிச்சேன் அந்த படிப்பினையே கடைப் பிடிச்சேன்
ஆண்டவன் கூட அப்புறம் நான் வணங்கிடும் அப்பாவுக்கு அப்புறம்

Wednesday, February 10, 2016

2. நான்-என் செய்வேன்-அப்பா(நாலு பேருக்கு நன்றி)



உலகத்தில் எனக்கிருக்கார் என்னைப்-போல் ஆயிரம் பேர்
நான் உண்மையாய்ப் பகிர்ந்து கொள்ள உன்னைப்போல் ஒருவர் இல்லை
என்-தந்தையே உனது-மேன்மை பாட்டினால் புகழ்ந்து-சொல்ல எனக்கொரு திறமுமில்லை..
உன்னைப்போல் யாரோ அப்பா
இன்று நான்-என் செய்வேன்-அப்பா
________________
(MUSIC)

நான்-என் செய்வேன்சொல்லப்பா இன்றுநான்-என்-செய்வேன் அப்பா (2)
நோயில்லாமல் உபாதை கொண்டேன் நீ-இல்லாமல் ஓடிச் சென்றால் 
நான் என்-செய்வேன் அப்பா ..இன்று நான்-என்-செய்வேன்-அப்பா
(MUSIC)
உறவு-என்றும் நட்பு-என்றும் பலப்பல இருக்குது-எனக்கு
அவரிடம்-போய் அழுவதற்கும் எனக்..கு உரிமை உண்டு 

தேற்றும்-உள்ளம் தன்னைக்கொண்டு அன்பு-காட்டும் சொந்தம் -உண்டு (2)
எல்லை-மீறும் தொல்லை-என்றால் அந்த-நேரம் நீ-தான் வேண்டும்
நான் என்-செய்வேன்-அப்பா
நான்-என் செய்வேன்சொல்லப்பா இன்று-நான் என்-செய்வேன் அப்பா
நோயில்லாமல் உபாதை கொண்டேன் நீ இல்லாமல் ஓடிச் சென்றால் 
நான் என்-செய்..வேன் அப்பா ..இன்று நான்-என் செய்..வேன்-அப்பா
(MUSIC)
நல்லதையே எனக்களித்தாய் நீ-பல இன்னலைக் கொண்டு 
என் பசியைப் போக்கி-வந்தாய் பல நாள் நீ-நீர் உண்டு 

ராஜ-வாழ்வை எனக்கே-தந்தாய் நீயுன்-வாழ்வை த்யாகம் செய்தாய் (2)
ராஜ வாழ்வை நான் தரும் போது நீ-இல்லாமல் சென்றிட்டாயே 
....

இன்று நான்-என் செய்வேன்-அப்பா
நான்-என் செய்வேன்சொல்லப்பா இன்று-நான் என்-செய்வேன் அப்பா
நோயில்லாமல் உபாதை-கொண்டேன் நீ இல்லாமல் ஓடிச்சென்றால் 
நான் என்-செய்வேன் அப்பா ..இன்று நான்-என் செய்வேன்-அப்பா

_____

Monday, January 18, 2016

ஆயிரமாய் நிறைகளையே (ஆளுக்கொரு தேதி வச்சு)




விருத்தம்
மகனே இருக்கேன்-நான் கலங்காதே எனவே 
நீ சொல்லும்-மொழி கேட்டிடவே
ஆசை கொண்டேனப்பா
இன்று-மொழி  கேட்டிடவே ஆசை  கொண்டேனப்பா
____________________________________________________

ஆயிரமாய் நிறைகளையே நீ-எனக்களித்தாய் நீ-எனக்களித்தாய்
(1+SM+1)
அப்பா ஆயினுமோர்-குறையளித்தாய் நீ-உந்தன் பிரிவால்
இப்போ நானழுமோர் குறையளித்தாய் நீ-உந்தன் பிரிவால்
ஆயிரமாய் நிறைகளையே நீ-எனக்களித்தாய் நீ-எனக்களித்தாய்
(MUSIC)
பூமி..யில்-நீ இருக்கிற-நாள் வரையினில்-நான் ஹீரோ 
பூமி-விட்டு போன-பின்னே ஆகிப்புட்டேன் ஜீரோ
ஓயும்போது சாஞ்சுக்கவே தோள்-கொடுக்க யாரோ
ஆயிரமாய் நிறைகளையே நீ-எனக்களித்தாய் நீ-எனக்களித்தாய்
(MUSIC)
அறிவுரைகள் கொடுக்க-உன்போல் யாராலே ஆகும்
நோகும்போது உன்முகத்தைக் கண்டாலே போதும்
போகும் போகும் எனது நோவும் காணாமல் போகும்
(MUSIC)
என்னிடத்தில் உள்ளதெல்லாம் என்-திறமா கூறு (2)
என்-தகப்பா உன்னறிவுத் தீயின்-முன்னே தூசு (2)
புத்தகத்தில்-படித்ததெல்லாம் கக்கிக்கிட்டுத் திரியும்..ஆ...ஆ..
புத்தகத்தில்-படித்ததெல்லாம் கக்கிக்கிட்டுத் திரியும்
 பிள்ளைக்கு-நீ சொல்லாமல் எதுவும் என்ன புரியும்
இன்னைக்கு-நீ இல்லாமல் எனக்கு-ஞானம் சூன்யம்
ஆயிரமாய் நிறைகளையே நீ-எனக்களித்தாய் நீ-எனக்களித்தாய்
ஏன் எனைப் பிரிந்தாய்.. ஏன் எனைப் பிரிந்தாய்..
_________

More