Showing posts with label நாலு பேருக்கு நன்றி. Show all posts
Showing posts with label நாலு பேருக்கு நன்றி. Show all posts

Wednesday, February 10, 2016

2. நான்-என் செய்வேன்-அப்பா(நாலு பேருக்கு நன்றி)



உலகத்தில் எனக்கிருக்கார் என்னைப்-போல் ஆயிரம் பேர்
நான் உண்மையாய்ப் பகிர்ந்து கொள்ள உன்னைப்போல் ஒருவர் இல்லை
என்-தந்தையே உனது-மேன்மை பாட்டினால் புகழ்ந்து-சொல்ல எனக்கொரு திறமுமில்லை..
உன்னைப்போல் யாரோ அப்பா
இன்று நான்-என் செய்வேன்-அப்பா
________________
(MUSIC)

நான்-என் செய்வேன்சொல்லப்பா இன்றுநான்-என்-செய்வேன் அப்பா (2)
நோயில்லாமல் உபாதை கொண்டேன் நீ-இல்லாமல் ஓடிச் சென்றால் 
நான் என்-செய்வேன் அப்பா ..இன்று நான்-என்-செய்வேன்-அப்பா
(MUSIC)
உறவு-என்றும் நட்பு-என்றும் பலப்பல இருக்குது-எனக்கு
அவரிடம்-போய் அழுவதற்கும் எனக்..கு உரிமை உண்டு 

தேற்றும்-உள்ளம் தன்னைக்கொண்டு அன்பு-காட்டும் சொந்தம் -உண்டு (2)
எல்லை-மீறும் தொல்லை-என்றால் அந்த-நேரம் நீ-தான் வேண்டும்
நான் என்-செய்வேன்-அப்பா
நான்-என் செய்வேன்சொல்லப்பா இன்று-நான் என்-செய்வேன் அப்பா
நோயில்லாமல் உபாதை கொண்டேன் நீ இல்லாமல் ஓடிச் சென்றால் 
நான் என்-செய்..வேன் அப்பா ..இன்று நான்-என் செய்..வேன்-அப்பா
(MUSIC)
நல்லதையே எனக்களித்தாய் நீ-பல இன்னலைக் கொண்டு 
என் பசியைப் போக்கி-வந்தாய் பல நாள் நீ-நீர் உண்டு 

ராஜ-வாழ்வை எனக்கே-தந்தாய் நீயுன்-வாழ்வை த்யாகம் செய்தாய் (2)
ராஜ வாழ்வை நான் தரும் போது நீ-இல்லாமல் சென்றிட்டாயே 
....

இன்று நான்-என் செய்வேன்-அப்பா
நான்-என் செய்வேன்சொல்லப்பா இன்று-நான் என்-செய்வேன் அப்பா
நோயில்லாமல் உபாதை-கொண்டேன் நீ இல்லாமல் ஓடிச்சென்றால் 
நான் என்-செய்வேன் அப்பா ..இன்று நான்-என் செய்வேன்-அப்பா

_____

Wednesday, December 9, 2015

யாரு-யாருக்கு(நாலு பேருக்கு நன்றி)




வெள்ளத்தில் இழந்ததெல்லாம் சொல்லவோர் வார்த்தையில்லை
நான் ஊமையாய் உறைந்த கணம் நடந்ததோ புரியவில்லை
கண்  கொட்டுமுன் எனது-மேனி மூழ்கி-நான் திகைத்து-நிற்க எனக்கொரு இறைவன்-அல்ல 
ஆயிரம் இறைவன்-வந்தார் அதில் யாரு-யாருக்குச் சொல்வேன்
________________________

யாரு-யாருக்கு நன்றி நான்-கூறுவேன்-சொல்லு தம்பி 
(2)
பேர்-சொல்லாமல் விடாமால் உழைத்தே கை-கொடுத்துத் தூக்கி விட்ட
யாரு-யாருக்கு நன்றி நான் கூறுவேன்-சொல்லு தம்பி
(MUSIC)

எனது-என்றும் எனக்கு-என்றும் சுகமாய் வாழ்ந்தது நேற்று
அதையனைத்தும் அழிப்பதற்கே திரண்ட வெள்ளம் இன்று
அந்த-வெள்ளம் தானே-வந்தாற் போல-என்-பால் வந்தார் காத்தார் (2)
இவர்கள்-இறைவன் இல்லை-என்றால் அந்த-ஒருவன் யாரோ தம்பி
யாரு நீ-சொல்லு தம்பி
யாரு-யாருக்கு நன்றி நான் கூறுவேன்-சொல்லு தம்பி
பேர்-சொல்லாமல் விடாமால் உழைத்தே கை-கொடுத்துத் தூக்கி விட்ட
யாரு-யாருக்கு நன்றி நான் கூறுவேன்-சொல்லு தம்பி
(MUSIC)

இன்பத்திலும் துன்பமுண்டாம் என்றார் ஆன்றோர்-அன்று
துன்பத்திலும் நன்மையுண்டாம் என்றிடும் அவர்-சொல் நன்று 


வெள்ளம்-கொண்டது வெறும்-பொருள்-பொன்னே 

தந்து-சென்றது நல்லோர் -அன்பே 
(2)
வார்த்தையாலே என்-சொல்லி-தம்பி அவருக்கே-நான் நன்றி சொல்வேன்
(Pause)
என்ன வென்று சொல்லுவேன் தம்பி
 
யாரு-யாருக்கு நன்றி நான்-கூறுவேன்-சொல்லு தம்பி
பேர்-சொல்லாமல் விடாமால் உழைத்தே கை-கொடுத்துத் தூக்கி விட்ட
யாரு-யாருக்கு நன்றி நான் கூறுவேன்-சொல்லு தம்பி
 
 
_____________