பெற்ற-மனப் பித்து-எந்தன் அன்னை-கொண்டது
(1+sm+1)
அது ஆண்டவன் தன்-வடிவாய் எனக்குத்-தந்தது
ஆசை-கொண்ட அன்னை-மனம் அள்ளித்தந்தது (2)
பதிலாய் அன்னைக்கு-நான் செய்த-பணி கொள்ளி வைத்தது
பெற்ற மனப்-பித்து-அந்த அன்னை-கொண்டது
(MUSIC)
கண்ணே என் பொன்னே எனப் பிள்ளை உச்சி மோந்தது
என் பிள்ளை போல உண்டா என்று மெச்சி மாய்ந்தது
(2)
கண்-கலங்கி என்-வலியைப் போக்கப்-பலதும் செய்தது (2)
தன்-வலியைத் தாங்கிப்-போகும் தானாக-என்றது
(Short Music)
பெற்ற-மனப் பித்து-எந்தன் அன்னை-கொண்டது
(MUSIC)
பெற்றவளே என் ருசிதான் உனக்கு ருசி
அடாடா என் வயிற்றில் தோன்றுவதே உனது பசி
(2)
என்னவெல்லாம் செய்தாய் நீ எனக்கு அம்மா
(1+SM+1)
உனக்குப் பின்னாலே நான்-படிக்கும் கவிகள்-சும்மா
பெற்ற-மனப் பித்து-எந்தன் அன்னை-கொண்டது
(MUSIC)
எனக்கென்று சொல்லிச் சொல்லி எதுவும் செய்தததடா
தனக்கென்று அன்று கொள்ளி மட்டுமெனைக் கேட்டதடா
(2)
எந்திரத்தைப் போலதினம் எந்தன் பணி செய்ததடா (2)
கைபிடித்த கணவனுக்கும் இல்லையந்த உரிமையடா
பிள்ளையென்ற உரிமையடா
பெற்ற-மனப் பித்து-எந்தன் அன்னை-கொண்டது
அது ஆண்டவன் தன்-வடிவாய் எனக்குத்-தந்தது
பெற்ற-மனப் பித்து-எந்தன் அன்னை-கொண்டது
No comments:
Post a Comment