Friday, September 11, 2026

4. பெற்றவளை போல் | அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது | Petravalai | Arthamulla Indhu madham |

பெற்றவளைப் போல் எனக்கு நீ கிடைத்தது 
அது இறையவன் திருவருளாய் எனக்களித்தது 
பாசம் கொண்ட அன்னை மனம் உனக்கு வாய்த்தது 
அதனால்  அன்னை இல்லை என்ற குறை எனக்கு மாய்ந்தது
பெற்றவளைப் போல் எனக்கு நீ கிடைத்தது 
கண்ணிமை போல் என் நலனை நீயும் பார்த்துக் கொண்டது 
என் அன்னை ஞாபகத்தை எனக்கு மூட்டி விட்டது 
கண் கலங்கி  என் வலியைப் பார்த்து நீயும் துடித்தது 
என் மனதில் பசுமரத்தின் ஆணி போல இருக்குது 
பெற்றவளைப் போல் எனக்கு நீ கிடைத்தது 
என்னவளே என் ருசிதான் உனக்கு ருசி 
அடடா ! என் வயிற்றில் தோன்றுவதே உனது பசி
என்னவெல்லாம் செய்தாய் நீ எனக்கு அம்மா !
அதற்கு முன்னாலே நான் படிக்கும் கவிகள் சும்மா 
பெற்றவளைப் போல் எனக்கு நீ கிடைத்தது 
எனக்கென்று சொல்லிச் சொல்லி எது வும் செய்தனையே  
Thanakkenru  என்றும் என்னை  நீ  எதுவும் கேட்டிலையே
எந்திரத்தைப் போலதினம் வீட்டில் பணி செய்தனையே
கைபிடித்த காரணத்தால் உன் நலத்தை துறந்தனையே  
உன் நலத்தை துறந்தனையே  !
பெற்றவளைப் போல் எனக்கு நீ கிடைத்தது 
அது இறையவன் திருவருளாய் எனக்களித்தது 
பாசம் கொண்ட உனது மனம் கடலைப் போன்றது 
அதிலே   எல்லாற்கும் குளிக்கும்பாக்யம் எளிதில் கிடைத்தது
பெற்றவளைப் போல் எனக்கு நீ கிடைத்தது ..!

-------------------------

Finding you—someone who is like a mother to me—

Was a gift bestowed upon me by Divine Grace.

You possess the heart of a truly loving mother;

Because of this, the void left by not having a mother of my own has vanished.

Finding you—someone who is like a mother to me—

The way you guarded my well-being, just as eyelids protect the eyes,

Evoked memories of my own mother.

The sight of you distressed and teary-eyed at the sight of my pain

Is etched in my heart, as firmly as a nail driven into fresh wood.

Finding you—someone who is like a mother to me—

My beloved, my tastes became your own;

Oh, the hunger I felt in my womb was the very hunger you shared!

The things you did for me, Mother—

All the poems I had read before pale in comparison to that;

I found a mother in you.

You did everything, always saying it was for my sake;

Never once did you ask for anything for yourself;

You toiled at home daily, like a machine;

For the sake of our union, you sacrificed your own well-being—

You sacrificed your own well-being!

Finding you—like a mother—was a blessing bestowed upon me by the Divine.

Your heart, filled with affection, is vast as the ocean;

And in it, everyone easily found the fortune to bathe.

Finding you—like a mother—was a blessing...!

SATHYA SONGS

3. எனக்காக வாழ்கின்ற | அலங்காரம் கலையாத | Enakkaaga | Alangaaram kalaiyaadha

எனக்காக வாழ்கின்ற நிலை-போச்சு என்பேன்
கண்ணே உன் முகம்-கண்ட அந்நாளிலே 
எனக்காக வாழ்கின்ற நிலை-போச்சு என்பேன்
கண்ணே உன் முகம்-கண்ட அந்நாளிலே 
நானெந்தன் தாய்-தன்னை நேராகக் கண்டேன் 
கண்ணே-உன் கண்-தந்த ஒரு நோக்கிலே
நானெந்தன் தாய்-தன்னை நேராகக் கண்டேன் 
கண்ணே-உன் கண்-தந்த ஒரு நோக்கிலே
கண்ணே-உன் கண்-தந்த ஒரு நோக்கிலே
(MUSIC)
கண்ணோடு நின்றாடும் உன் புன்னகை 
என் தாயும் கொண்டிட்டப் பொன்னின் நகை
கண்ணோடு நின்றாடும் உன் புன்னகை 
என் தாயும் தந்திட்டப் பொன்னின் நகை
பேரோடு உறவாடிச் செல்கின்றதல்ல 
நீ தந்த உறவந்த இறைவன் வரம் 
நீ எந்தன் குலதெய்வம் தாயின் வரம்
எனக்காக வாழ்கின்ற நிலை-போச்சு என்பேன்
கண்ணே உன் முகம்-கண்ட அந்நாளிலே
(MUSIC)
என்தாயும் நீ-என்று மனம் சொல்லுது 
என் தாயின் எழில்-உந்தன் கண் மின்னுது
  வந்தாள் என்தாய்-சொந்தம் என்றே என்னோடு 
எந்நாளும் இனிதாக நாம் வாழுவோம்
எந்நாளும் பிரியாமல் நாம் வாழுவோம்
எனக்காக வாழ்கின்ற நிலை-போச்சு என்பேன்
கண்ணே உன் முகம்-கண்ட அந்நாளிலே
(MUSIC)
தலை சாய்த்துச் சிரிக்கின்ற உந்தன் முகம்
காண்கின்ற என் நெஞ்சம் சொல்லும் தினம் 
எனைப் பார்த்துச் சிரிக்கின்ற உந்தன் முகம்
காண்கின்ற என் நெஞ்சம் சொல்லும் நிஜம் 
என் தாயைப் போலந்த ஒரு பார்வை சாட்சி  
என் தாயைப் போலுந்தன் ஒரு பார்வை சாட்சி  
சொல்கின்ற திருக்காட்சி பொய்யாகுமோ 
உயிரோடும் தாயன்பு பொய்கூறுமோ
எனக்காக வாழ்கின்ற நிலை-போச்சு என்பேன்
கண்ணே உன் முகம்-கண்ட அந்நாளிலே 
எனக்காக வாழ்கின்ற நிலை-போச்சு என்பேன்
கண்ணே உன் முகம்-கண்ட அந்நாளிலே

SATHYA SONGS

2. எந்தன் உயிராய் உன்னை நானறிவேன் | முத்துநகையே | Endhan Uyiraai | Muthu Nagaiye

எந்தன் உயிராய் உன்னை நானறிவேன்  ஆஹா .. ஆஹா .. 

உந்தன் உயிராய் என்னை நீயறிவாய் நம்மை யாரறிவார் ..ஓஹோ..  ஓஹோ
(Short Music)
எந்தன் உயிராய் உன்னை நானறிவேன்  ஆஹா .. ஆஹா .. 
உந்தன் உயிராய் என்னை நீயறிவாய் நம்மை யாரறிவார் ..ஓஹோ..  ஓஹோ
(Music)
நகமும் சதையும் போலே நாமும் இன்றுவரை நன்றிருந்திட்டோம்
இன்னும் இருக்கும் காலம் முழுதும் ஒன்றி நாமிருந்து களிப்போம் 
எந்தன் உயிராய் உன்னை நானறிவேன்  ஆஹா .. ஆஹா .. 
(MUSIC)
இன்னுயிரைத் தந்தாய் நீ அவர்க்கு
அவ்விதத்தில் தந்தை சேய் உனக்கு
இன்னுயிரைத் தந்தாய் நீ அவர்க்கு
அவ்விதத்தில் தந்தை சேய் உனக்கு
தன்னை விடப் பெரிதாய் பார் உனக்கு 
அது தான் நிஜமெனும் பேர் உனக்கு 
எந்தன் உயிராய் உன்னை நானறிவேன்  ஆஹா .. ஆஹா .. 
உந்தன் உயிராய் என்னை நீயறிவாய் நம்மை யாரறிவார் ..ஓஹோ..  ஓஹோ
(MUSIC)
எந்தனுயிர்த் தாய் போல் உன் பரிவு 
நெஞ்சறிந்த சேவை உன் புரிவு
எந்தனுயிர்த் தாய் போல் உன் பரிவு 
நெஞ்சறிந்த சேவை உன் புரிவு
வேற்றெவர்க்கும் அன்பாய் ..
(Short Music)
வேற்றவர்க்கும் அன்பாய் புன் சிரிப்பு அடடா அது ஓர் பூவிரிப்பு
வேற்றவர்க்கும் அன்பாய் உன் சிரிப்பு அடடா அது ஓர் பூவிரிப்பு
(Short Music)
எந்தன் உயிராய் உன்னை நானறிவேன்  ஆஹா .. ஆஹா ..
உந்தன் உயிராய் என்னை நீயறிவாய் நம்மை நாமறிவோம்

SATHYA SONGS

1. நானும் நீயும் யுகம் பலதாண்டி | பாலும் பழமும் | Naanum Neeyum | Paalum Pazhamum

ம்..ம்ம் 
(SM)
நானும் நீயும் யுகம் பலதாண்டி இருந்து பாங்காய் உடல் பல தாங்கி 
பிறந்து உலகில் வாழ்ந்துது போலே  இருக்கு அன்பே எனக்கு உன்னாலே
நானும் நீயும் யுகம் பலதாண்டி இருந்து பாங்காய் உடல் பல தாங்கி 
பிறந்து உலகில் வாழ்ந்துது போலே  இருக்கு அன்பே எனக்கு உன்னாலே
(music)
உண்ணும் உணவில் உணர்வென நீயே உறங்க வரும் என் கனவிலும் நீயே (2)
எந்தன் சொல்லினை மதிப்பவள் நீயே உந்தன் சொல்லிலும் பணிவுகொண்டாயே (2)
நானும் நீயும் யுகம் பலதாண்டி இருந்து பாங்காய் உடல் பல தாங்கி
பிறந்து உலகில் வாழ்ந்துது போலே  இருக்கு அன்பே எனக்கு உன்னாலே
(music)
எஞ்சி இருக்கும் உணவு உண்டாயே எனக்கு என்றும் விருந்து தந்தாயே (2)
பஞ்சில் இருக்கும் மென்மையை நீயே உந்தன் மனமாய்க் கொண்டிருந்தாயே (2)
நானும் நீயும் யுகம் பலதாண்டி இருந்து பாங்காய் உடல் பல தாங்கி 
பிறந்து உலகில் வாழ்ந்துது போலே  இருக்கு அன்பே எனக்கு உன்னாலே
(music)
ஈன்ற தாயை நான் உன்னில் கண்டேன் உனது அன்பே நம் வாழ்வின் எல்லை (2)
எதனைக் கொடுத்தே மனம் நான் நிறைவேன் எனது கடனை அடைத்திட நானே (2)
நானும் நீயும் ஓர்மனமாகி உலக வாழ்வின் கடலினில் நீந்தி  
சோகம் எதிலும் மூழ்கிவிடாமே ஓடமானாய் குலமகள் நீயே 
ம்..ம்ம்

SATHYA SONGS

சத்யா-SATHYA

Youtube playlist of all songs

1. நானும் நீயும் யுகம் பலதாண்டி | பாலும் பழமும் | Naanum Neeyum | Paalum Pazhamum

2. எந்தன் உயிராய் உன்னை நானறிவேன் | முத்துநகையே | Endhan Uyiraai | Muthu Nagaiye 

3. எனக்காக வாழ்கின்ற | அலங்காரம் கலையாத | Enakkaaga | Alangaaram kalaiyaadha 

4. பெற்றவளை போல் | அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது | Petravalai | Arthamulla Indhu madham | 

Sunday, August 23, 2026

35.செல்லமே(மௌனமே பார்வையால்)

[Pallavi]
செல்லமே என்றுனை நான் காண  எண்ணும் போதே
தாத்துவே என்றெனை நீ தேடி வந்ததென்ன
செல்லமே என்றுனை நான் காண  எண்ணும் போதே
தாத்துவே என்றெனை நீ தேடி வந்ததென்ன

[Instrumental Break]
[Verse 1]
சின்னக் கரத்தால் நீ எந்தன் கழுத்தைச் சுற்றி மாலை போல கோ...ர்த் தணைப்பதென்ன  
அணைப்பதென்ன
சின்னக் கரத்தால் நீ எந்தன் கழுத்தைச் சுற்றி மாலை போல கோ...ர்த் தணைப்பதென்ன 
அந்தக் கடவுள்  தான் தந்த வரமாய்  நான் அந்த கணத்தில் நெஞ்சில் நினைப்பதென்ன
நான் எந்தன் மனதில் என்றும் நினைப்பதென்ன
[vocal ad-lib] ம்...
செல்லமே என்றுனை நான் காண  எண்ணும் போதே
தாத்துவே என்றெனை நீ தேடி வந்ததென்ன

[Instrumental Break]

என்னை விடவே நான் உன்னை நினைத்தே நாள் முழுதும் உன் நினைவில் கழிப்பேனே களிப்பேனே
என்னை விடவே நான் உன்னை நினைத்தே நாள் முழுதும் உன் நினைவில் களிப்பேனே
எந்தன் கண்மணீ நீ தந்த இதத்தில் நான் இன்ப சாகரத்தில் மிதப்பேனே
பேரின்ப சாகரத்தில் மிதப்பேனே
ம்...
செல்லமே என்றுனை நான் காண  எண்ணும் போதே
தாத்துவே என்றெனை நீ தேடி வந்ததென்ன

OTHER SONGS

Sunday, July 26, 2026

34.ரிதுவே என் உயிர் நீதானே(நிலவே என்னிடம் நெருங்காதே)

[chorus]

ரிthuவே என் உயிர் நீதானே
நீ கிடைத்தாய் எனக்கோர் குறை இல்லை
ரிthuவே என் உயிர் நீதானே
நீ கிடைத்தாய் எனக்கோர் குறை இல்லை
[bridge]
புதிராய் இருப்பினும் நீ தானே-அந்த புதிரின் விடையாய் ஆனாயே
[chorus]
ரிthuவே என் உயிர் நீதானே
நீ கிடைத்தாய் எனக்கோர் குறை இல்லை
[Instrumental interlude]
[verse 1]
யாருக்கும் குழந்தை சேயாகும்
நீ எனக்கொரு வகையில் தாயாகும்
யாருக்கும் குழந்தை சேயாகும்
நீ எனக்கொரு வகையில் தாயாகும்
உன் உறவெனக்கொரு   பேறாகும்
உன் பாட்டன் என் வாழ்க்கையின் வேராகும்
[chorus]
ரிthuவே என் உயிர் நீதானே
நீ கிடைத்தாய் எனக்கோர் குறை இல்லை
[instrumental interlude]
[Verse 2]
உண்மையுடன் நான் வாழ்ந்து வந்தேன்
உண்மையுடன் நான் வாழ்ந்து வந்தேன்
நீ பிறந்ததும்  உனையும்  இணைத்துக் கொண்டேன்
மறைந்த பின்னாலும் இருந்திடுவேன்
உன் நினைவிலென் பாட்டாய் நிறைந்திருப்பேன்

Friday, October 11, 2024

33.உலவுகிற விண் மீனோ(நிலவு ஒரு பெண்ணாகி) **

உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோடஇறங்கி வந்த நிலவோ
(MUSIC)

உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட இறங்கி வந்த நிலவோ இறங்கி வந்த நிலவோ

வாயுதிரும் பூப்போலே இருக்கும்-உந்தன் சிரிப்போ (2)
தேனெனவும் அமுதெனவும் இனிப்பதுந்தன் மொழியோ 
உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட இறங்கி வந்த நிலவோ இறங்கி வந்த நிலவோ
(MUSIC)

உருவம் தனில் சேயாக பாசம் தனில்தாயாக 
உருவம் தனில் சேயாக பாசம் தரும் தாயாக
முதிருகிற தாத்தாவின் மனம் நிறைய வந்தவளோ 
பொன் நகைகள் எதற்கோ சொல் செயற்கை எழில் எதற்கோ சொல் (2)
ரிது உனது அன்பு மனம் கொண்ட எழில் போதாதோ!
உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட முடிவு செய்த நிலவோ
(MUSIC)

கவருகிற குரல் குழலோ உன் மழலை மது தருமோ 
பாங்கினில் நீ பெரியவர் போல் பேசு திறன் இறை வரமோ
வாழ்க்கையினில் பேறாக நீ எனக்கு அமைந்தவளோ (2)
யாக்கையினில் சேயாக தாய் மனமாய்க் கொண்டவளோ 
உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட இறங்கி வந்த நிலவோ
(MUSIC)

தேனொழுகும் சொல்லுடனும் உதவிடும் நல் கரத்துடனும் 
இவ்வுலகில் வாழ்ந்திருக்க பாட்டன் உனை வாழ்த்துகிறேன் 
இறை நாமம் உதட்டினிலே மனித சேவை கரத்தினிலே (2)
என்பதை நீ எடுத்துக்கொண்டால் மேன்மை சேரும் வாழ்க்கையிலே 
உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட இறங்கி வந்த நிலவோ இறங்கி வந்த நிலவோ

OTHER SONGS

Saturday, September 14, 2024

33.அம்மா எனும் பொழுதே(விழியே கதை எழுது) **

அம்மா ...
எனும் பொழுதே ..
என் நோவே ..
தெரியாதே !
அஎனை போலே மண்ணின் மேலே ஓர் தெய்வமும் வேறேதம்மா
(music)
அன்னை போலே மண்ணின் மேலே ஓர் தெய்வமும் வேறேதம்மா
அம்மா எனும் பொழுதே என் நோவே  தெரியாதே
அன்னை போலே மண்ணின் மேலே ஓர் தெய்வமும் வேறேதம்மா
(music)

எந்தன் மனதின்-எண்ண அலைகள் அதில் முழுதும் உந்தன்-எழில் கதைகள் (2)
என் நெஞ்சில் உன் அன்பு தாகம் தந்தாளுமே உந்தன் தாக்கம்
உன் போலவே வேறாரம்மா
(music)

நெஞ்சம் கனமானது கண்கள் சுனையானது (2)
உந்தன் மனமானது அது எந்தன் மனையானது
என் நெஞ்சில் ஏக்கம் எப்போதும் உன் ஆசை கண்ணாலே போகும் 
உன் போலவே வேறாரம்மா
அம்மா எனும் பொழுதே என் நோவே  தெரியாதே
அன்னை போலே மண்ணின் மேலே ஓர் தெய்வமும் வேறேதம்மா
(music)

நெஞ்சில் நிழலாடுது உந்தன் நினைவானது (2)
திரையின் படம் போலது என் மனதில் தினம் ஓடுது 
உன் வார்த்தை தேனூற்றுத் தோயல் 
நீயன்பு தெய்வத்தின் சாயல் 
உன் போலவே வேறாரம்மா
அம்மா எனும் பொழுதே என் நோவே  தெரியாதே
அன்னை போலே மண்ணின் மேலே ஓர் தெய்வமும் வேறேதம்மா
உன் போலவே வேறாரம்மா..

Friday, September 13, 2024

32.ரிதுவே அன்பமுது(விழியே கதை எழுது) **

ரிதுவே அன்பமுது என்தாயும் நீ தானே..!
பிள்ளை போலே அன்னை நீயே உன் போலவே வேறாரம்மா
(music)
பிள்ளை போலே அன்னை நீயே உன் போலவே வேறாரம்மா
ரிதுவே அன்பமுது என்தாயும் நீ தானே..!
பிள்ளை போலே அன்னை நீயே உன் போலவே வேறாரம்மா
(music)

எந்தன் மனதின்-எண்ண அலைகள் அதில் முழுதும் உந்தன்-எழில் கலைகள் (2)
என் நெஞ்சில் உன் அன்பு தாகம் தந்தாளுமே உந்தன் தாக்கம்
உன் போலவே வேறாரம்மா
(music)

கண்கள் கணையானது நெஞ்சம் பிணையானது (2)
பஞ்சு மனமானது அது எந்தன் மனையானது
என் நெஞ்சில் வாட்டங்கள் ஏது நீ-தாத்து என்கின்ற போது  
உன் போலவே வேறாரம்மா
ரிதுவே அன்பமுது என்தாயும் நீ தானே..!
பிள்ளை போலே அன்னை நீயே உன் போலவே வேறாரம்மா
(music)

மழலை பல கூறுது உண்மை பல-கூறுது (2)
சேயின் குரல்-போன்றது..அது தாயை நினைவூட்டுது 
உன் வார்த்தை தேனூற்றுத் தோயல் 
என் தாயைப் போலன்பின் சாயல் 
உன் போலவே வேறாரம்மா
(SM)
ரிதுவே அன்பமுது என்தாயும் நீ தானே..!
பிள்ளை போலே அன்னை நீயே உன் போலவே வேறாரம்மா
உன் போலவே வேறாரம்மா..

OTHER SONGS

Wednesday, August 28, 2024

31.எந்தன் மனம் ரிது உன் வசம்(பச்சைக் கிளி முத்துச்சரம்) **

எந்தன் மனம் ரிது உன் வசம் சென்றே விடும் தானாய்
(vsm)
எந்தன் மனம் ரிது உன் வசம் சென்றே விடும் தானாய்
கண்ணே உந்தன் தேனாய் வரும் சொல் கேட்டிடப் பாராய்
(vsm)
மண்ணில் சுகம் என்றே வரும் பல்லாயிரம் தானாய்  .. ஆ..
மண்ணில் சுகம் என்றே வரும் பல்லாயிரம் தானாய்
எனினும் தாத்தூ என்றே வரும் சொல்லாகுமோ கூறாய் 
மண்ணில் சுகம் என்றே வரும் பல்லாயிரம் தானாய்
எனினும் தாத்தூ என்றே வரும் சொல்லாகுமோ கூறாய் 
(MUSIC)

வித்தை-போல வார்த்தை-ஒன்றே ஒன்றை-மட்டும் கொண்டு
இன்பம்-கோடி  தந்தே-உள்ளம் கொள்ளை-கொண்டாய் நன்று
வெள்ளம்-போல விழியில்-ப்ரேமை ஓடச் செய்தாய் அன்பை 
அது-நின்றாட அழகாய்-நெஞ்சில் அணையும்-செய்தாய் அன்பே  
கண்ணில்-ஆடும் அன்பிலே உணவும் வேணுமோ (2)
என-நீ-தரும் அன்பின் விசை உலகினை இயக்கிடுமோ 
எந்தன் மனம் ரிது உன் வசம் சென்றே விடும் தானாய்
கண்ணே உந்தன் தேனாய் வரும் சொல் கேட்டிடப் பாராய்
(MUSIC)

உந்தன்-பேச்சு உந்தன்-மூச்சு எல்லாமும்-இன்..னிசையே
என்றே-உன்னைக் கண்டோர்-கூறும் உண்மை-இம்மண்..மிசையே
சொல்லில்லாத பாடல்-கூட பாரில்-ஒன்று உண்டு
உள்ளம்-தோறும் வாழும்-ஆத்ம ராகம் என்று-நின்று
ஆத்ம-ராகம் என்பதே உன்னால் ஆனதோ 
அந்த-ராகம் என்பதே உன்னால் ஆனதோ 
என்றே-உளம் கேட்கும்-விதம் உள்ளதுன் அன்புறவோ 
மண்ணில் சுகம் என்றே வரும் பல்லாயிரம் தானாய்
எனினும் தாத்தூ என்றே வரும் சொல்லாகுமோ கூறாய் 
(MUSIC)

அந்தக்-கால வாழ்க்கை-போல உண்டோ-ஒன்..று சொல்ல 
என்றே-என்றும் நெஞ்சில்-ஆடும் ஏக்கம்-ஒன்று மெல்ல
உன்னைக் காண போயே போச்சு சென்றே ஏக்கம்-போச்சு
அன்னை போல உந்தன் பாசம் ஒன்றே வாழ்க்கை ஆச்சு 
எல்லை உந்தன் அன்பிலே உண்டோ என்று தான் (2)
கண்ணே ரிது என் நெஞ்சினில் ஆனந்தம் தோன்றுதம்மா 
மண்ணில் சுகம் என்றே வரும் பல்லாயிரம் தானாய்
எனினும் தாத்தூ என்றே வரும் சொல்லாகுமோ கூறாய் 
எந்தன் மனம் ரிது உன் வசம் சென்றே விடும் தானாய்
கண்ணே உந்தன் தேனாய் வரும் சொல் கேட்டிடப் பாராய்

அஹ்ஹஹ்ஹஹா ஒஹ்ஹஹ்ஹொஹோ 
லல் லல் லலல் ல லா லா....
லல் லல் லலல் ல லா லா....

OTHER SONGS

Friday, August 23, 2024

30.எங்களுக்கு ரிதுவே ராதே(ஆடலுடன் பாடலை) **

 எங்களுக்கு ரிதுவே ராதே வேறு இராதே நெஞ்சில் ரிது ராதே 
ஆ ..ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ
எங்களுக்கு ரிதுவே ராதே வேறு இராதே நெஞ்சில் ரிது ராதே 
எங்கள்கண்  விழிக்கும்போதே இணை பிரியாமே நெஞ்சில்  ரிது ராதே       

எங்கள்குல வேரே ரிது-தானே எண்ணங்களில் வேறே தோன்றாதே
எங்களுக்கு வேறே எது பேறே  என்றுமவள் பேரே பெரும்பேறே  ...ஏ...
(2)
கண்ணனுடன் ஆடும் ஒரு ராதே எங்களுக்கு ராதே  ரிது  தானே 
ஆடிவரும் எதுவும் ரிது ராதே  .. ...ஏ...
(2)
அந்த கோகுல ராதே போல் ரிது தானே  என் குல ரிது ராதே  
எங்களுக்கு ரிதுவே ராதே வேறு இராதே நெஞ்சில் ரிது ராதே 
எங்கள்கண்  விழிக்கும்போதே இணை பிரியாமே நெஞ்சில்  ரிது ராதே 
(music)

கண்ணழகில் மானே ரிது ராதே  வார்த்தைகளில் தேனே தருவாளே
அந்தசுவை போலே கிடையாதே அச் சுவையில் உலகே தெரியாதே ...ஏ 
(2)
ராதைக்கொரு கண்ணன் எனல் போலே எங்களுக்கு ரிதுவோ அதன் மேலே 
வேறெதுவும் எனோ மண் மேலே ஏ..
(2)
அந்த கோகுல ராதே போல் ரிது தானே  என் குல ரிது ராதே
எங்களுக்கு ரிதுவே ராதே வேறு இராதே நெஞ்சில் ரிது ராதே 
ஆ ..ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ
எங்கள்கண்  விழிக்கும்போதே இணை பிரியாமே நெஞ்சில்  ரிது ராதே       
ஆ ..ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ
எங்களுக்கு ரிதுவே ராதே வேறு இராதே நெஞ்சில் ரிது ராதே 
எங்கள்கண்  விழிக்கும்போதே இணை பிரியாமே நெஞ்சில்  ரிது ராதே 

Wednesday, August 21, 2024

29.பாட்டனுக்கு பேத்தியின் பேச்சே(ஆடலுடன் பாடலை) **

பாட்டனுக்கு பேத்தியின் பேச்சே வாழ்வினில் என்றும் சுகம் சுகம் சுகம் 
ஆ ..ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ
பாட்டனுக்கு பேத்தியின் பேச்சே வாழ்வினில் என்றும் சுகம் சுகம் சுகம் 
என்றுமவள் நினைவில் ஆட்டம்  போடும் பாட்டன் மனம் மனம் மனம்       

கண்ணிரண்டில் ஜாலம் பல தோன்ற பாட்டன் மனம் வியப்பில் தடுமாற
விந்தையிலும் விந்தை எனத் தோன்ற பாட்டன்-மனம் அடடா எனக் கூற...அ 
கண்ணிரண்டில் ஜாலம் பல தோன்ற பாட்டன் மனம் வியப்பில் தடுமாற
விந்தையிலும் விந்தை எனத் தோன்ற பாட்டன்-மனம் அடடா எனக் கூற...அ 
பஜனைகளைப் பாட்டன் தினம் பாட பதிலுக்கது போலே அவள் பாட என்ன சுவை ஆஹா கனி போல ஆ.. .
பஜனைகளைப் பாட்டன் தினம் பாட பதிலுக்கது போலே அவள் பாட என்ன சுவை ஆஹா கனி போல ஆ.. .
மனம் அன்பினில் இணையும் பொழுதினில் உலக நினைவும் பறந்தோட 
பாட்டனுக்கு பேத்தியின் பேச்சே வாழ்வினில் என்றும் சுகம் சுகம் சுகம் 
என்றுமவள் நினைவில் ஆட்டம்  போடும் பாட்டன் மனம் மனம் மனம் 
(music)

பாட்டனவன்  லவ் யூ எனக்கூற பதிலுக்கவள் ஐ டூ எனக்கூற 
கொஞ்சி அவள் தாத்தூ எனக்கூற பாட்டனுக்கு ஜென்மம் கடைத்தேற  ..அ .. 
பாட்டனவன்  லவ் யூ எனக்கூற பதிலுக்கவள் ஐ டூ எனக்கூற 
கொஞ்சி அவள் தாத்தூ எனக்கூற பாட்டனுக்கு ஜென்மம் கடைத்தேற  ..அ .. 
பேத்தியவள் பேச்சில் இனிப்போட  பாட்டனவன்  நெஞ்சில் சிலிர்ப்போட  
பார்த்தவரின் நெஞ்சில் வியப்போட ஆ ...
பேத்தியவள் பேச்சில் இனிப்போட  பாட்டனவன்  நெஞ்சில் சிலிர்ப்போட  
பார்த்தவரின் நெஞ்சில் வியப்போட ஆ ...
இதம் போர்த்திவிடும் உயிர்ப் பேத்தியிடம் மனம் பாட்டனிடம் ஏது
பாட்டனுக்கு பேத்தியின் பேச்சே வாழ்வினில் என்றும் சுகம் சுகம் சுகம்  
ஆ ..ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ
என்றுமவள் நினைவில் ஆட்டம்  போடும் பாட்டன் மனம் மனம் மனம்       
ஆ ..ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ
பாட்டனுக்கு பேத்தியின் பேச்சே வாழ்வினில் என்றும் சுகம் சுகம் சுகம் 
என்றுமவள் நினைவில் ஆட்டம்  போடும் பாட்டன் மனம் மனம் மனம்

 OTHER SONGS

Thursday, July 25, 2024

11.வான் கொள்ளாது(நீ என்னென்ன சொன்னாலும்)-Appaa

வான் கொள்ளாது நீ தந்த உயர்வு
நான் சொன்னாலும் புரியாத உணர்வு
வான் கொள்ளாது நீ தந்த உயர்வு
நான் சொன்னாலும் புரியா..த உணர்வு
ஓர் சொல்லாலே நீ தந்த உறவு 
வேறெல்லாமென் அப்பாவின் பிறகு
ஓர் சொல்லாலே நீ தந்த உறவு 
வேறெல்லாமென் அப்பாவின் பிறகு
உறவு பிறகு
(sm)

உந்தன் நினைவுகள் மனதினில் பிறந்து (2)
எந்தன் கண்கள் கொஞ்சம் அழுகையில் நனைந்து (2)
நெஞ்ச உணர்வினில் அமுதெனக் கலந்து (2)
உந்தன் மகன்-மனம் புலம்புது கரைந்து..
புலம்புது கரைந்து..
ஓர் சொல்லாலே நீ தந்த உறவு
வேறெல்லாமென் அப்பாவின் பிறகு
(இசை)2

என்னை உலகினில் சிறப்புற நடத்தி (2)
எந்தன் நலத்தினில் தன்-மனம் இருத்தி (2)
தன்மெய் களைத்திட உழைப்பினில் வருத்தி (2)
ஐயே இருந்தனை நாட்களைக் கடத்தி நாட்களைக் கடத்தி
வான் கொள்ளாது நீ தந்த உயர்வு
(இசை)3

உன்னை தமிழினில் கவிபல புனைந்து
உந்தன் திருதரன் படித்தனன் முனைந்து 
அந்நல் திறத்தினை பலபடி புகழ்ந்து
அய்யே உரைத்திட வா மண்ணில் பிறந்து  
மறுபடி  பிறந்து  
வான் கொள்ளாது நீ தந்த உயர்வு
நான் சொன்னாலும் புரியாத உணர்வு
ஓர் சொல்லாலே நீ தந்த உறவு 
வேறெல்லாமென் அப்பாவின் பிறகு
உறவு.. பிறகு

Wednesday, July 24, 2024

31.எந்தன் இதயத்தின் உள்ளே Tune:தங்கப்பதக்கத்தின் மேலே-AMMA31-APPAA10

எந்தன் இதயத்தின் உள்ளே
ஒரு அச்சு பதித்தது போலே 
நிற்கும் அன்பு நினைவுகளாலே
மனம் தன்னில் நிறைந்திடும் அப்பா
என்னை கொஞ்சி அணைத்திடும் அம்மா
ஆ...
எந்தன் இதயத்தின் உள்ளே
ஒரு அச்சு பதித்தது போலே 
நிற்கும் அன்பு நினைவுகளாலே
மனம் தன்னில் நிறைந்திடும் அப்பா
என்னை கொஞ்சி அணைத்திடும் அம்மா
(இசை)

அன்றைக்கு இன்றைக்கு நாளைக்கு என்று காலக் கணக்கைக் கடந்து (2)
பல கோடி ஜன்மம் தாண்டி என்னில் என்றும் இருப்பது ஒன்று (2)
அதனில் அமிழ்ந்து அதனில் மகிழ்ந்து மயங்கி நின்றேனே
அதனை அன்னை தந்தை நினைவு என்றறிந்தேனே
எந்தன் இதயத்தின் உள்ளே
ஒரு அச்சு பதித்தது போலே 
நிற்கும் அன்பு நினைவுகளாலே
மனம் தன்னில் நிறைந்திடும் அப்பா
என்னை கொஞ்சி அணைத்திடும் அம்மா
(இசை)

போதாது போதாது என்று மனது என்னில் திளைப்பது என்ன (2)
இரவான பிறகும் தூக்கம் துறந்து உள்ளில் திளைப்பது என்ன (2)
பசிக்கு உணவு வயிறு நிறைய இதம் பிறக்காதோ
அன்னை தந்தை அன்பு மனதில் சுகம் கொடுக்காதோ
எந்தன் இதயத்தின் உள்ளே
ஒரு அச்சு பதித்தது போலே 
நிற்கும் அன்பு நினைவுகளாலே
மனம் தன்னில் நிறைந்திடும் அப்பா
என்னை கொஞ்சி அணைத்திடும் அம்மா
(இசை)
சித்தாடும் பெற்றோரின் அன்பு நினைவைச் சொல்லி அழைப்பது என்ன 
(SM)
சித்தாடும் பெற்றோரின் அன்பு நினைவைச் சொல்லி அழைப்பது என்ன 
எந்த வார்த்தை வரியும் சொல்லத் திகைத்து தோல்வி அடைவது என்ன (2)
கூறும் உதட்டில் ஊறும் அமுதை சொல்லிடச் சொல்லேது (2)
மகனாசையாக அம்மா அப்பா என்றிடும்போது
மகனாசையாக அப்பா அம்மா என்றிடும்போது
எந்தன் இதயத்தின் உள்ளே
ஒரு அச்சு பதித்தது போலே 
நிற்கும் அன்பு நினைவுகளாலே
மனம் தன்னில் நிறைந்திடும் அப்பா
என்னை கொஞ்சி அணைத்திடும் அம்மா

ஆ..

Tuesday, July 2, 2024

32.யாரு வேறிங்கு கூறு ( நாலு பேருக்கு நன்றி ) **

விருத்தம்
உலகத்தின் உயிருக்கெல்லாம் தாயைப்-போல் யாருமில்லை
நான் ஒருவனாய் உரைக்கவில்லை இதற்கு ஓர் மறுப்பு இல்லை
என் அன்னையே என்று தாளில் உவந்து நீ புகுந்து கொள்ள
உனக்கொரு பந்தம் அன்னை .. எவருக்கும் இறைவன் தந்தான் 
நீ-கூறு வே..றிங்கு யாரு
__________________________________

யாரு வேறிங்கு கூறு நீ கூறு வேறிங்கு யாரு (2)
தாயைப்-போல அலாதி-ப்ரேமை ஊட்டிக்-கொஞ்சித் தூக்கிக்-கொள்ள யாரு-வேறிங்கு கூறு..நீ கூறு வேறிங்கு யாரு
(MUSIC)
உனக்கு ஒன்றும் எனக்கு ஒன்றும்  இறைவன் உலகினில் இருந்து 
அநுதினமும் வழங்கியதே அனைத்தும் அன்னை என்று 
பார்த்துப் பார்த்தே யாவும் செய்யும் தாயின் உள்ளம் என்றும் ஓடும் (2)
சொந்தமாகும் பிள்ளை பின்னால் அந்த தாயே தெய்வம் ஆகும்
யாரு வேறிங்கு கூறு
யாரு வேறிங்கு கூறு நீ கூறு வேறிங்கு யாரு
தாயைப்-போல அலாதி-ப்ரேமை ஊட்டிக்-கொஞ்சித் தூக்கிக்-கொள்ள யாரு-வேறிங்கு கூறு..நீ கூறு வேறிங்கு யாரு
(MUSIC)
துன்பத்திலே நீ-அழுதால் வந்தேன் என்பது-தாயே
பக்கத்திலே தானிருக்கேன் கண்ணே என்பதும் தாயே
வாடும்போது அவளே வந்தாள்  வாழும் வாழ்வும் அவள் தான் தந்தாள் (2)
 நன்றி சொல்லப் போகும் போது மௌனத்தாலே ஆசி சொல்வாள்
(PAUSE)
நீ கூறு வேறிங்கு யாரு
யாரு வேறிங்கு கூறு நீ கூறு வேறிங்கு யாரு
தாயைப்-போல அலாதி-ப்ரேமை ஊட்டிக்-கொஞ்சித் தூக்கிக்-கொள்ள 
யாரு-வேறிங்கு கூறு..நீ கூறு வேறிங்கு யாரு

Thursday, April 13, 2023

30. என்னைப் பிரிந்திட்ட போதும்(தென்றல் உறங்கிய போதும்)**

என்னைப் பிரிந்திட்ட போதும் மண்ணில் மறைந்திட்ட போதும் 
என்னிடம் வந்திடம்மா அம்மா என்னிடம் வந்திடம்மா வாம்மா என்னிடம் வந்திடம்மா
என்னைப் பிரிந்திட்ட போதும் மண்ணில் மறைந்திட்ட போதும் 
என்னிடம் வந்திடம்மா அம்மா என்னிடம் வந்திடம்மா வாம்மா என்னிடம் வந்திடம்மா
SM

 உன்னை நினைந்து என் நெஞ்சம் மடியை நாடிக் கெஞ்சும் 
என்னிடம் வந்திடம்மா அம்மா என்னிடம் வந்திடம்மா
உன்னை நினைந்து என் நெஞ்சம் மடியை நாடிக் கெஞ்சும் 
என்னிடம் வந்திடம்மா அம்மா என்னிடம் வந்திடம்மா வாம்மா என்னிடம் வந்திடம்மா
  music

என்னை-மடியிலே போட்டு தலையைக் கோதியே தலையைக் கோதியே
   sm
ஆசையாக பார்த்த உந்தன் கண்கள் தோன்றுதே நினைவில் தோன்றுதே
   மாசிலாத உந்தன் அன்பு மீண்டும் தோன்றுமா   
பேசிடாமல் பேசும் உந்தன் கண்கள் தோன்றுமா 
   மாசிலாத உந்தன் அன்பு மீண்டும் தோன்றுமா   
பேசிடாமல் பேசும் உந்தன் கண்கள் தோன்றுமா 
  என்று நினைந்தே ஏங்கும் உனது மடியை நாடும்  
என்னிடம் வந்திடம்மா வாம்மா என்னிடம் வந்திடம்மா
  வாம்மா என்னிடம் வந்திடம்மா
  ( SM)

  ஆ...
  இரவில் நானுமே எந்தன் கண்கள் மூடியே கண்கள் மூடியே
  sm
  உறக்கம் நாடியே  புரண்டு கிடக்கும் போதிலே புரளும் போதிலே
  நானும் நீயும் வாழ்ந்த காலம் தோன்றுதே அம்மா  
பாதி தூக்கம் கூட ஓடிப் போகுதே அம்மா
   நானும் நீயும் வாழ்ந்த காலம் தோன்றுதே அம்மா  
பாதி தூக்கம் கூட ஓடிப் போகுதே அம்மா
  என்று நினைந்தே ஏங்கும் உனது மடியை நாடும்  
என்னிடம் வந்திடம்மா வாம்மா என்னிடம் வந்திடம்மா   வாம்மா என்னிடம் வந்திடம்மா
உன்னை நினைந்து என் நெஞ்சம் மடியை நாடிக் கெஞ்சும் என்னிடம் வந்திடம்மா அம்மா
என்னிடம் வந்திடம்மா வாம்மா என்னிடம் வந்திடம்மா

Thursday, December 22, 2022

29.உனது மடியில் புரண்ட-நாட்கள்(உனது விழியில் எனது பார்வை) **

உனது  மடியில் புரண்ட-நாட்கள் நெஞ்சில் தோன்றுது (2)
என் நினைவில் இன்றும் இருக்கும் அதுதான் தங்கம் போன்றது 
உனது  மடியில் புரண்ட நாட்கள் நெஞ்சில் ஆடுது 
என் வயது குறைந்து உன்னில் இருக்க நெஞ்சம் ஏங்குது அம்மா நெஞ்சம் ஏங்குது
(Music)

உயர்வென்று ஆயிரம் நன்று எனக்கென்று வாழ்வில் உண்டு 
தாயுந்தன் அன்பின் முன்னால் அவை என்றும் நிற்குமோ
உயர்வென்று ஆயிரம் நன்று .. எனக்கென்று வாழ்வில் உண்டு 
தாயுந்தன் அன்பின் முன்னால் அவை என்றும் நிற்குமோ
-பூமியின்-மேலே ஆண்டவன் பேர்-தான் தாயெனக்-கூறுவதோ
-உனைப் போல தெய்வம் வருமோ (2)
-உனது  மடியில் புரண்ட நாட்கள் நெஞ்சில் ஆடுது 
என் வயது குறைந்து உன்னில் இருக்க நெஞ்சம் ஏங்குது அம்மா நெஞ்சம் ஏங்குது
(Music)

தனக்கென்று வாழ்ந்தது கொஞ்சம் குணக்குன்று தாய்மை நெஞ்சம்
அது செய்த த்யாகம் என்றும் தோன்றாது வேறிடம் 
தனக்கென்று வாழ்ந்தது கொஞ்சம் .. குணக்குன்று தாய்மை நெஞ்சம்
அது செய்த த்யாகம் என்றும் தோன்றாது வேறிடம் 
என்-உடல் கொண்ட காயத்தின்-ரத்தம் அவள்-கண் வடிக்கிறது
அது தெய்வம் கொண்ட பிறப்பு (2)
உனது  மடியில் புரண்ட நாட்கள் நெஞ்சில் ஆடுது 
என் வயது குறைந்து உன்னில் இருக்க நெஞ்சம் ஏங்குது அம்மா நெஞ்சம் ஏங்குது

Tuesday, December 20, 2022

28.எனது மனதில்(உனது விழியில் எனது பார்வை)

எனது மனதில் உனது நினைவு தேனைப் போன்றது (2)
என் இதயம் முழுதும் இனிக்கும் அதுவே கவிதை ஆகுது 
-எனது மனதில் ரிது உன் நினைவு தேனைப் போன்றது
-என் இதயம் முழுதும் இனிக்கும் அதுவே கவிதை ஆகுது கவிதை ஆகுது 
(Music)

உனதன்புக் கண்களிரண்டில் விழி கொண்டு ஜாலம் காட்டி  
உடன் வந்து தாவியணைத்தாய் அதன் மேலும் ஸ்வர்க்கமோ
உனதன்புக் கண்களிரண்டில் .... விழி கொண்டு ஜாடை பேசி 
உடன் வந்து தாவியணைத்தாய் அதன் மேலும் ஸ்வர்க்கமோ
-கண்ணிமையாது உன் முகம் கண்டால் காலமும் நின்றிடுமோ 
-அது போல இன்பம் எதுவோ (2)
-எனது மனதில் ரிது உன் நினைவு தேனைப் போன்றது
-என் இதயம் முழுதும் இனிக்கும் அதுவே கவிதை ஆகுது கவிதை ஆகுது 
(Music)

 பூப் போலுன் குரலினில் என்றும் தேன்போல வார்த்தைகள் சிந்தும்
அது பாட்டன் பேரைச் சொல்லும் அதைக் கேட்க ஏங்கும் நெஞ்சம் 
 பூப் போலுன் குரலினில் என்றும் தேன்போல வார்த்தைகள் சிந்தும்
அது பாட்டன் பேரைச் சொல்லும் .. அதைக் கேட்க ஏங்கும் நெஞ்சம் 
-என்உயிர் என்றும் உன்முகம் தந்த அன்பினில் வாழ்கிறது
-அதில் இன்று எந்தன் உலகு அதில் என்றும் வந்து உலவு
எனது மனதில் ரிது உன் நினைவு தேனைப் போன்றது
என் இதயம் முழுதும் இனிக்கும் அதுவே கவிதை ஆகுது கவிதை ஆகுது 

OTHER SONGS

Wednesday, October 12, 2022

28.ஆண்டவன் வந்தான் நமைக் காத்து நின்றான் **

ஆண்டவன் வந்தான் நமைக் காத்து நின்றான் 
பூலோக வாழ்வில் தந்தை தாயாக
தன்னலம் இன்றி நமக்காக எங்கும் வேராறுமே இல்லையே 
ஆண்டவன் வந்தான் நமைக் காத்து நின்றான் 
பூலோக வாழ்வில் தந்தை தாயாக
(MUSIC)
பிள்ளைகள் உதைத்தும் மிதித்தும் என்றைக்கும் இதத்தைக் கொடுக்கும் (2) 
தாயை  நீ பார் 
என்றென்றும் உழைத்தே இளைத்தும் பிள்ளைக்குச் சிறப்பே கொடுக்கும் 
தந்தையைப் பார்
நிலவுபோல்  தாய் முகம் ஆக்குமே பரவசம் 
வாழ்விலே தைரியம் தந்தை தான் இது நிஜம் 
ஆண்டவன் வந்தான் நமைக் காத்து நின்றான் 
பூலோக வாழ்வில் தந்தை தாயாக
 (MUSIC)
சென்றங்கு கண் மூடும் வரைக்கும்  என்றைக்கும் சேய் நன்மை நினைக்கும் (2) 
தாய்மையாகும்
என்றென்றும் பிள்ளைக்கே உழைக்கும் விந்தைக்கு இருக்கும் ஒரே பேர் 
தந்தையாகும் 
அன்புதான் தாய் மனம் தந்தையோ கரிசனம்
கண்டபின் வேண்டுமோ ஆண்டவன் தரிசனம்
ஆண்டவன் வந்தான் நமைக் காத்து நின்றான் 
பூலோக வாழ்வில் தந்தை தாயாக
தன்னலம் இன்றி நமக்காக எங்கும் வேராறுமே இல்லையே 
ஆண்டவன் வந்தான் நமைக் காத்து நின்றான் 
பூலோக வாழ்வில் தந்தை தாயாக